உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

அறிவா லுணர்ந்த அத்தனையும்

அணையா விளக்கா யொளிவீச

அறிவுக் கடலில்' வெளியிட்டே

அழகுத் தமிழைப் பரப்பியுயர்

நெறிசே ரொழுக்க நிலைகாத்து

நினைவிற் கினிதாம் மனைவியொடு

நிகழ்த்து மில்லப் பெருவாழ்வில்

நிலையாம் புகழை நிரப்பியருட்

செறிவா லுயர்ந்து துலங்குபொழிற் சிலைபோல வுருண்டு திரண்டழகு

திகழ்ந்து சிறக்க நல்லறத்திற் செழித்துத் துறவும் பின்பூண்டு

3

பொறிவா யவித்த பெருவிந்தை

புரிந்தாய் வருக வருகவே பொலிவுந் திருவு மொளிவீசும் பொன்னே வருக வருகவே.

177

58

1. அடிகள் தம் அறிவாராய்ச்சியால் அறிந்த ஆய்வு முடிவுகளைத் தாம் நடத்திவந்த அறிவுக்கடல் (ஞானசாகரம்) என்னும் இதழ் மூலம் வெளியிட்டு வந்தார்கள்.

2. அடிகள் பூண்ட துறவு தமிழ்த்துறவு; மக்களொடு மகிழ்ந்து, மனையறம் காத்து, துறவு பூணல் தமிழ்நெறி.

3. ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/202&oldid=1595091" இலிருந்து மீள்விக்கப்பட்டது