உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

❖ 34❖ மறைமலையம் - 34

பொழிகின்ற தண்ணொளியைக் கொண்டுள்ள மலரிதழ்

பூரிக்க மலர்வித்தலால்

பொறிவாய்க்கு நல்லின்பந் தந்தமுத மெய்க்கலை

பொங்கியெழ வேசெய்தலால்

வழிநின்ற சொல்லிருட் பழிபோக்கிப் பார்மனம் வயங்கொளிக் காளாக்கலால்

வற்றியறி யாக்கங்கைக் குற்றசிவ னாரன்பில் வாழ்வுற்ற மேன்மையுறலால்

மொழிகின்ற செந்தமிழி லுவமைக்குப் பொருளாகி முன்னிற்குந் தன்மைபெறலால்

முழுமைபெறு மொளிநிலவு திருவடிவி னாலுலகை முற்றுந்தன் வயமாக்கலால்

அழிகின்ற பொய்நிலையை யற்றிவனை யொத்தனை

அம்புலீ ஆடவாவே

அறிவோங்கு மறைமலை யடிகளுளம் மகிழ்வுற

அம்புலீ ஆடவாவே.

சந்திரன் மறைமலையடிகள்

62

மலரிதழ் மலர்வித்தல் - அல்லி மலரினை இதழ் விரித்து மலரச் செய்தல்.

வண்டுகள் மகிழ மலர்களை மலரச் செய்வாய்.

வழியில் நின்ற இருள்நீக்கி ஒளி பரப்புவாய்.

சிவனின் பால் வாழ்வு பெற்றாய்.

மதிமுகம் என உவமையாதல்.

வெள்ளுவா (முழுநிலா) நாளில் உலகை மகிழ்வித்தல். மலர் இதழ் - அறிவைக்கொண்டு சொற்பொழிவில் மலர் போன்ற இதழ் விரித்தல்

கேட்பார் ஐம் பொறிகளும் மகிழ அறிவுக்கலை நல்குபவர் அறியாமை இருள் நீக்கி அறிவொளி கூட்டுவார்

சிவன் அன்பால் மேன்மையுற்றவர். தமிழ் மலை ல என உத உவமையாதல் அடிகள் உருவப் பொலிவினாலும் அறிவினாலும் பிறரை மகிழ்வித்தல்.

கலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/207&oldid=1595096" இலிருந்து மீள்விக்கப்பட்டது