உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

மறைமலையம் -34 *

கார்குழற் சாந்தம்மை கற்புநெறி வாழ்கஅவர்

கருத்துரை துணைவர்வாழ்க

கருவிலே திருவென உருவான மறைமலை

காணுவழி எச்சம்வாழ்க

பேர்புகழ் மறைமலை நூல்நிலை யம்வாழ்க பெரு சைவ நெறியும்வாழ்க

பிறங்குமறை மலையடி தனித்தமிழ்க் கல்லூரி

பெற்றிபல வுற்றுவாழ்க

தேர்செலுந் திருவீதிப் பல்லா வரம்வாழ்க

திகழுநூற் றாண்டின்விழாச்

செய்காரைக் குடிராம சாமிதமிழ்க் கல்லூரித்

திறன்வாழ்க வாழ்கவையம்

சீர்பெறத் தமிழுடன் இறைதாளம் வாழ்கநீ

சிறுதே ருருட்டியருளே

திரள்தனித் தமிழ்தரு மறைமலைச் செல்வமே

சிறுதே ருருட்டியருளே.

100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/245&oldid=1595134" இலிருந்து மீள்விக்கப்பட்டது