உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

219

ஊனிறை யுடம்பினை யுதறிமெய்ப் புகழுடம்

புற்றிடும் பொழுது முற்றும்

உள்சடங் கெத்தனை யுற்றாலு மவைதூய

ஒண்டமிழ் மொழியிலன்றிக்

கூனிடும் பிறமொழிக் கூற்றினில் பயன்செயக் கூடாதென் றுணரவைக்க

கூரறி வாளர்க்குச் சொற்பொழிவுக் காணிக்கை கொள்ளவும் முறைசமைக்க

தீனியிற் பொருந்திடு பொருந்தாத நிலையினைத் தெளிவோ டெடுத்துரைக்க

சீர்தமிழர் பண்பாடு திருக்கோவில் வழிபாடு

சிறப்பீயும் நெறிவகுக்கத்

தேனிறை தனித்தமிழ்த் தேரேறி வந்தவன்

சிறுதே ருருட்டியருளே

திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன்

சிறுதே ருருட்டியருளே.

99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/244&oldid=1595133" இலிருந்து மீள்விக்கப்பட்டது