உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் -34 *

(வேறு)

முல்லைக்குத் தானமர் தங்கத்தே ருறைதந்த

முடியுடைப் பாரிதனிலும்

முல்லைக்குத் தேனமர் செந்தமிழ்த் தேருரை

முழுதீந்த புகழுமெய்தி

இல்லைக்குச் சான்றெனும் பாலைக்குங் குறிஞ்சியின்

இறையருட் தமிழைஈந்தே

இயல்பசுஞ் சோலையாய் இழையூடு பாவுற

எடுத்தநூல் நெய்தலாக்கி

எல்லைக்குச் சார்புறாக் கருணைமரு தம்வீச

இந்திரன் வருணனுடனே

இளையவன்1 துர்க்கைதிரு மாலுமவர் தேரேறி

இனிதே விரைந்தருளத்

தில்லைக்குள் ளுள்ளவனின் உள்ளத்தேர் நிற்பவன்

சிறுதே ருருட்டியருளே

திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன்

சிறுதே ருருட்டியருளே.

98

முல்லைக்குத் தேரீந்த பாரியைக் காட்டிலும், முல்லைப் பாட்டுக்கு ஆராய்ச்சியுரை எழுதிப் புகழ் மேம்பட்டவர் அடிகள். பாலைக்கு நிலப் பாகுபாடு இல்லை பாலை - பாலை நிலம். அடிகள் பட்டினப்பாலைக்கும், குறிஞ்சிப் பாட்டுக்கும் ஆராய்ச்சியுரைகள் செய்தார்.

1. முருகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/243&oldid=1595132" இலிருந்து மீள்விக்கப்பட்டது