உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

217

அருளுங் கருணை இறைவன் நெஞ்சி

லமைவாய் வந்திடவும்

அறிவும் தெளிவும் வளமும் திடமும் அருளித் தந்திடவும்

மருளும் புரியாக் கொடுமை இருளும் மறைந்தே ஓடிடவும்

மலரும் உள்ளத் துள்ளொளி பரவி மகிழ்வே கூடிடவும்

பொருளும் நலமே புரியும் நினைவும் பொருந்திப் பல்கிடவும்

புகழ்சேர் தமிழிற் குலகோர் வணக்கம்

பொலிவாய் நல்கிடவும்

உருளும் வையப் பெருந்தேர் வாழ்த்த

உருட்டுக சிறுதேரே

உயர்தமிழ் வரையும் மறைமலைப் பூங்கை

உருட்டுக சிறுதேரே.

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/242&oldid=1595131" இலிருந்து மீள்விக்கப்பட்டது