உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

பிள்ளைத்தமிழ் இறைகுருவனார்

223

முன்னுரை

முற்றும் அயன்மொழி விரவாத் தனிச்செந்தமிழில் இயன்ற மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்' என்னும் இச் சிற்றிலக்கியத்தின் கண் இயற்கையிகந்த உயர்வு நவிற்சியோ போலித் தொன்ம (புராண)க் கதைச் செய்திகளோ இடம்பெற்றில; இயற்கை நிகழ்ச்சிகளும் உண்மைச் செய்திகளுமே அணி நயம்படப் புனையப் பெற்றிருக்கின்றன.

சிறுதெய்வ வணக்கம் முழுமுதற் கடவுள் வழிபாட்டு நெறிக்கும், அதனை வலியுறுத்தும் பாட்டுடைத் தலைவர், நூலாசிரியன் கோட்பாடுகளுக்கும் ாடுகளுக்கும் ஏலாமையின் காப்புப் பருவத்தின்கண் அம்மையம்பலவாணர், தமிழ்த்தாய், சமயச் சான்றோர், முத்தமிழ்ப் புலவோர், உரையாசிரியர், கணக்காயர், ஆராய்ச்சியாளர், பல கலைவாணர், ஆட்சியாளர், பொதுத் தொண்டர் என்னும் பதின்மர் வழுத்தி வேண்டிக் கொள்ளப்பெற்ற தன்றித் திருமால் முதலிய பதின்மர் அங்ஙனம் வேண்டிக் கொள்ளப்பெறவில்லை. அற்றேல் இஃது ஆன்றோர் வழக்கொடும் மாறுபட்டதோவெனின், பெரும்புலவர் மீனாட்சிசுந்தரனார் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் தில்லைவாழ் அந்தணர் முதல் மன்னியசீர் மறைநாவன் ஈறான பதினொரு பாடலில் சிவனடியார் பெருமக்களே வழுத்தி வேண்டப்பெற்றிருத்தலின் இஃது ஆன்றோர் வழக்கொடும் மாறுபட்டதாகாது.

பாட்டுடைத் தலைவரான அடிகளார்தம் கொள்கைகள், நூல்கள், நிறுவனங்கள், வரலாற்று நிகழ்ச்சிகள் முதலியன பற்றிய சிறப்புச் செய்திகள் யாவும் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் இந்நூலின்கண் இடம்பெற்றுள்ளன.

இளமைப் பருவத்திலேயே அடிகளார் நூல்கள் அனைத்தையும் ஆரா வேட்கையொடும் பல்காற் பயின்று செந்தமிழுணர்வும், சிவநெறியொழுக்கமும் கொண்டு அவைதமக்குப் பணியாற்றுவதில் முனைப்பும் உறைப்பும் உடையேமை, அடிகளாரையே பாட்டுடைத் தலைவராகக் கொண்ட இச் சிற்றிலக்கியம் ஆக்கும் முயற்சியில் ஈடுபடுத்தி முற்றுப்பெறுவித்த திருவருளை வழுத்தி

வணங்குகின்றேம்.

சென்னை

தி.பி. 2007 (கி.பி. 1976)

- இறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/248&oldid=1595137" இலிருந்து மீள்விக்கப்பட்டது