உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் -34 *

கடவுள் வாழ்த்து

உலகெலாந் தோற்றியுங் காத்தும் ஒடுக்கியும் ஓவா தருள்வெளிக்குள்

உயிரினம் மேன்மேற் றழைத்துச் சிறப்புற்(று)

உயர்ந்துபே ரின்பங்கொள

அலகிலாப் பலவிளை யாடல்செய் மாட்சியான்

அறிவினின் மேம்படுத்தி

அகத்துணரும் முழுமுதற் செம்பொருள் எனநின்ற ஆர்ந்தபெரு மெய்ம்மையொளியே! இலகுநற் செந்தமிழ் திருநெறி எனப்படுவ இருள்வயப் பட்டநிலைமை

1இரிவுறத் தமிழினம் எழுச்சியுற் றோங்கிட

இருநிலம் வியக்குமாறு

பலதலைய வாயநற் றொண்டினால் ஆழ்ந்தினிது பாரித்த நுண்ணறிவினால்

பாங்குயர் தவத்தினால் வீங்குபுகழ் மறைமலை 2பைந்தமிழ் 3சிறக்கவென்றே!

குறிப்புரை :

1. இரிவுற - நீங்க.

2. பைந்தமிழ்

பிள்ளைத்தமிழ் (பசுமை

இளமைக்குறிப்பு).

3. சிறக்கவென்றே வென்று சிறக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/249&oldid=1595138" இலிருந்து மீள்விக்கப்பட்டது