உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • பிள்ளைத்தமிழ் இறைகுருவனார்

1. காப்புப் பருவம்

1

அம்மை அம்பலவாணர்

மலர்தலைய பலகோடி யண்டங்கள் யாவையும் மாறுபா டின்றியாண்டும்

மன்னிநின் றாங்கவை தந்நெறி இயங்கிட

மன்னுயி ரெலாங்'கலிப்ப

மலரனைய 2நெஞ்சினும் மாமன்ற நடுவினும் மருவிநின் றாடல்கொண்டு

3மம்மரொன் றில்லாத 4செம்மையே அருள்செய்யும் அம்மையம் பலவபோற்றி!

குலவுநற் றமிழர்தங் கொள்கையாஞ் செந்நெறிக் 5கொண்முடிபு தன்மேன்மையும்

கொழுந்துவிட் டொளிர்கின்ற செந்தீ விளக்கமே குறிசிவ 6இலங்கமென்னும்

உலகுபுகழ் மெய்மையும் வையகம் உய்யுமா(று) உணர்த்துநன் மெய்த்தவத்தோன்

உயர்7மூலன் மரபில்வரு பெயரோங்கு மறைமலை ஒள்ளியற் காத்தருள்கவே!

குறிப்புரை :

225

நெஞ்சினும் – "சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும்” - திருக்கோவை.

1.

கலிப்ப

-

தழைக்க.

2.

3.

4.

5.

மம்மர் அறியாமை.

செம்மையே... “செம்மையே யாய சிவபதம்” - திருவாசகம். கொண்முடிபு சித்தாந்தம்.

6. இலங்கம் இலிங்கம்.

7. மூலன்

திருமூலர் மரபில் வந்த அரசானந்த அடிகளார் மறைமலையடிகளுக்கு மந்திரம் அருளினர் என்பது வரலாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/250&oldid=1595139" இலிருந்து மீள்விக்கப்பட்டது