உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் -34 *

2

தமிழ்த்தாய்

'அம்மா' வெனச்சொல்ல எந்தமக் கருள்செய்யும்

அமுதவடி வானயாயே!

அனைத்துலகம் எங்கணும் ஆட்சிபெற் றொளிர்கின்ற

அறிவார்ந்த மூலமுதலே!

செம்மாந்து 'பேறுபதி னாறுமுற் றுங்கொண்டு

திகழ்கின்ற பெருமாட்டியே!

சீரார்ந்த தென்குமரி நாடாண்ட நாயகி! திருவளர் செல்விபோற்றி!

இம்மா நிலத்துமுதன் மாந்தன் பிறந்தகம் இருங்கடற் குமரிநாடே

இயம்பிடு முதன்மொழி அவன்நா வசைத்திட எழுந்தநற் றமிழேயென

எம்2மா திரத்தினுந் தன்மா பெரும்புலம் இலங்குற எடுத்துரைத்தோன்

3ஏறெனப் பொலிவுகொள் வீறுயர் சால்பினெம் “ஏந்தலைக் காத்தருள்கவே!

குறிப்புரை :

1.

பேறுபதினாறு

மும்மை முதலியன.

2. மாதிரம் - திசை.

3.

தமிழின் பதினாறுவகைப் பேறுகளாவன செம்மை,

ஏறு - அரியேறு (ஆண்சிங்கம்).

ஏறு

4. ஏந்தல் - ஆண்பாற் சிறப்புப்பெயர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/251&oldid=1595140" இலிருந்து மீள்விக்கப்பட்டது