உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

3

சமயச் சான்றோர்

வையத்து வாழ்வாங்கு வாழ்ந்துமேம் பாடுற வயங்குபுகழ் நிலைநிறுத்த

வான்பதம் பெறுமற்று யான்என தறச்செய் வழிப்படுத் தொன்மைசான்ற

மெய்யகப் பொருளுணர்ந் துய்வுகொடு பேரின்பம்

மேவுநெறி யிற்புணர்த்தும்

மேனாள் தொடங்கிவரும் ஆனாத சீர்த்தியின் மேலாய திருமரபினீர்!

பொய்யகத் தொன்மங்கள் புகலுவன சிவனியப் பொருள்நெறிய வாகாவெனப்

போற்றுசிவ நெறிபழந் தமிழ்க்கொள்கை யேயெனப் பொருந்துமுரை செய்தெமக்குக்

கையகத் துற்றதீங் கனிபோல் விளக்கியெங்

கைதூக்கி 2ஆதரிக்கும்

கருதுதவ மேன்மையின் ஒருவனென வந்தவெங் கண்மணியைக் காத்தருள்கவே!

227

குறிப்புரை :

1. பழந்தமிழ்க் கொள்கை

‘பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்’

என்பது அடிகளார் நூல்களுள் ஒன்று.

2. ஆதரித்தல் - ஆக்கத்திற்குத் துணை செய்தல் என்னும் பொருளுடைய தமிழ்ச்சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/252&oldid=1595141" இலிருந்து மீள்விக்கப்பட்டது