உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் -34 *

4

முத்தமிழ்ப் புலவோர்

1தொல்லைப் பழங்ëகுமரி நல்லகடு வாய்ந்துதமிழ் தோன்றுநாள் அன்றுதொட்டுத்

தூயபெரு மறைகளைத் தோற்றியும் இலக்கணம் துறைதொறும் வரையறுத்தும்

எல்லை யிலாதபல கலையிலக் கியநூல்கள் இயற்றியும் வழங்கச்செயும்

ஈடிலா முத்தமிழ்ப் புலவோர்தம் மரபினில் இலங்குநன் மாண்புமிக்கீர்!

சொல்லைப் புகுத்திநந் தமிழைச் சிதைத்ததொடு தொடர்பாய் நமைக்கெடுத்தோர்

சூழ்ந்தபொல் லாங்கெலாம் வீழ்ந்துபட வாகைகொள் 4சுடரனைய பேரறிவினான்

இல்லை இவற்குநிகர் என்றுலகம் ஏத்துநன்

இருந்தமிழ் வாணர்க்கெலாம்

இலக்கியம் இலக்கணம் இவனெனத் திகழ்தரும்

எந்தையைக் காத்தருள்கவே!

குறிப்புரை :

1. தொல்லை

தொன்மை.

2. குமரி - குமரிக்கண்டம்.

3. அகடு - வயிறு.

4.

சுடரனைய ஞாயிறு போலும்.

குமரி வயிற்றில் தமிழ் தோன்றியமை ஒரு புதுமையாயினவாறு காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/253&oldid=1595142" இலிருந்து மீள்விக்கப்பட்டது