உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

229

5

உரையாசிரியர்

ஐயமுந் திரிபுமற ஆர்ந்தபாப் பொருளெலாம் அகழ்ந்தெடுத் துள்ளங்கொள

அருமைசான் மகவினுக் கமுதங் குழைத்தூட்டும் அன்னையைப் போல்வழங்கி

வையகம் போற்றவுயர் செய்யதமி ழுக்குரை

வகுத்தநக் கீரன்மரபில்

வாழையடி வாழையென வண்டமிழ்த் தொண்டுசெய் வளமார்ந்த புலமாண்பினீர்! மெய்யருள் நூற்குரை செய்தலா காதென

மெத்தவும் கழிமடமையால்

மேலோர்தம் நூல்களை வாளா உருப்போட்டு மெலியுநிலை முற்றுமாற்றி

ஐயன்மணி வாசகன் செய்ததிரு வாசகத்(து) அரும்பொருள் 1விரித்து மற்றும்

2ஆராய்ச்சி யுரைகள்செய் தாற்றுப் படுத்தநல் அடிகளைக் காத்தருள்கவே!

குறிப்புரை :

1. விரித்து - திருவாசக விரிவுரை.

2. ஆராய்ச்சி பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/254&oldid=1595143" இலிருந்து மீள்விக்கப்பட்டது