உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

241

17

1முத்திறத் தவரும் ஒத்து மகிழ்ந்திட முன்னைச் சிவநெறியின் 2முடிவுறு முடிபே மீமுடி பென்று

முழங்கிப் 3பெயர்கொண்டோன் மெத்தவு 4மறைமுடி கொள்கை பரப்புவி வேகா னந்தற்கு

மேன்மைச் சிவனிய தனிமுடி பருளிய மேதைப் பெருமகனாம் எத்திசை யும்புகழ் வித்திய 5சோம

சுந்தரன் மாணவனாய்

6எழில்வர லாறுங் காஞ்சியும் ஆக்கமும் இயற்றிநன் மெய்யறிவின்

அத்த னெனக்கொடு போற்றினை நன்றே ஆடுக செங்கீரை!

அம்பல வாணன் அடிமலர் பரவி ஆடுக செங்கீரை!

குறிப்புரை :

1. முத்திறத்தார் - நாட்டார், ஒட்டார், அயலவர்.

2. முடிவுறு முடிபு சித்தாந்தம்.

3. பெயர் சூறாவளி (சண்டமாருதம்) என்னும் பட்டம்.

4. மறை முடிபு - வேதாந்தம்.

5.

சோமசுந்தரன் - அடிகளாரின் மெய்ந்நூலாசிரியரான திருப்பெருந்திரு சோமசுந்தரனார்.

6. எழில்வரலாறுங்... - சோமசுந்தரநாயகர் வரலாறு, சோமசுந்தரக்காஞ்சி, சோமசுந்தரக் காஞ்சியாக்கம் என்பன அடிகளார் இயற்றிய நூல்கள்.

மன்னன் சேதுபதியின் பேரவையில் சோமசுந்தரனார் சிவனியக் கொண்முடிபு நாட்டியமையையும், விவேகானந்தர்க்கு அஃது அறிவுறுத்தியமையும் வரலாற்றில்

காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/266&oldid=1595155" இலிருந்து மீள்விக்கப்பட்டது