உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

19

விருந்தியல் நாடகம் ஆக்கி வழங்கி விளங்கு புகழ்கொண்டோன்

விரிதமிழ் போற்றும் 'சுந்தரன் இனிதே விரும்பு கணக்காயன்

2செருந்துசூழ் நாகை 3நாரா யணனாஞ்

சீரிய பெரியோனால்

செந்தமிழ் அமுதம் ஊட்டப் பெற்றவ

திப்பிய மெய்ப்புலவ

திருந்திய பத்துப் பாட்டுறு 4பாலைத்

தெள்ளிய ஆய்வுரைநூல்

திருவுயர் அன்னோன் நினைவாய்ப் படையல்

செய்துளம் நனியுருகும்

அருந்தவ வாழ்வின் பெருந்தகை யாள

ஆடுக செங்கீரை!

அம்பல வாணன் அடிமலர் பரவி ஆடுக செங்கீரை!

குறிப்புரை :

1. சுந்தரன்

மனோன்மணீய ஆசிரியர் சுந்தரனார்.

243

2. செருந்து - செருந்திக்கொடி.

3. நாராயணன் - நாகை நாராயணசாமி என்பார் அடிகளாரின் இயற்றமிழ் ஆசிரியர்; மனோன்மணீயம் சுந்தரனார் இவ்வாசிரியரிடத்திலேயே யாப்பிலக்கணம் பயின்றார்.

4.

பாலை – ‘பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை' என்னும் நூலைத் தம்மாசிரியர் நினைவாக வெளியிட்டனர் அடிகளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/268&oldid=1595157" இலிருந்து மீள்விக்கப்பட்டது