உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

மறைமலையம் -34 *

20

பிறமொழி கலவா(து) உயரிய தமிழைப் பேணி வளர்ப்பதுவே

பேசு பெரும்பணி என்றருண் மொழியைப் பெட்புற மேற்கொண்டு

திறமிகு 'கட்டுரை 2நூல்பல யாத்துத்

தெள்ளிய பணியாற்றித்

3திருவரங் கற்குப் பெருமனை யாளும்

திருவுற் றிகல்வெல்லும் மறமி(கு) 4இராம சாமித் தலைவனை மாபெரி யாரென்றே

மன்பதை போற்றப் பட்ட மளித்து மாண்புறு 5மகள்தாதை

அறவோர் போற்றும் இறவாப் புகழோய் ஆடுக செங்கீரை!

அம்பல வாணன் அடிமலர் பரவி ஆடுக செங்கீரை!

குறிப்புரை :

1. கட்டுரை

2. நூல்கள்

தனித்தமிழ்க் கட்டுரைகள்.

வடசொற் றமிழ் அகரவரிசை, நைட்டிங்கேல் அம்மையார், பட்டினத்தார் பாராட்டிய மூவர், முப்பெண்மணிகள் வரலாறு முதலியன. 3. திருவரங்கற்கு - திருவரங்கனார்க்கு.

4.

5.

இராமசாமி - ஈரோடை இராமசாமிப் பெரியார்.

மகள் அடிகளாரின் மகளான திருவாட்டி நீலாம்பிகையம்மையார். ஈ.வே.இரா. அவர்களுக்கு அம்மையார் தலைமையில் நிகழ்ந்த மாநாட்டில் ‘பெரியார்' என்னும் பட்டம் வழங்கப்பட்டது;

மேற்கொண்டு, யாத்து, பணியாற்றி, திருவுற்று, பட்டமளித்து மாண்புறு மகள்;

‘மகன் தந்தைக் காற்றும் உதவி' எனும் திருக்குறள் பொருண்மையைக்

கருதுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/269&oldid=1595158" இலிருந்து மீள்விக்கப்பட்டது