உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

3. தாலப் பருவம்

245

21

மழலைச் செந்தமிழ் 'மூதாட்டி

2மலர்வாய் 3இன்மொழி மெய்யேயாய் மன்னி விளங்கும் வாய்மை நலம்

மாநிலம் உணரக் காட்டுவைபோல்

சுழலைத் தாங்கிக் கரைபொருது

துளும்பிப் “பாலை நிலமறையச் சொரியும் வெள்ளப் பாலாறு

சூழுந் தொண்டை வளநாட்டுள்

5புழலைப் புரையும் பேரேரி

பொலியும் பல்லவ புரத்தின்கண் பொதுமைக் 'கழகச் சான்றோனாய்ப்

புதுமை யரசு வீற்றனையால்

தழலைப் புரையுந் திருமேனி

தாலே தாலோ தாலேலோ

தன்னே ரில்லாத் 'தமிழாளி தாலே தாலோ தாலேலோ!

குறிப்புரை :

1. மூதாட்டி

- 2 3

2. மலர்வாய்

3. இன்மொழி

ஔவையார்.

வாய்மலர் வாயினால்

மலர்ந்த மலர்

-

வினைச்சொல்.

'தெண்ணீர்

வயிற்றொண்டை நன்னாடு

சான்றோருடைத்து”.

4.

பாலை

“பாலினால் (நீரினை) நிலம் மறையும்படி சூழும் எனவும்,

பாலைநிலம் (இல்லையென்னுமாறு) மறையும்படி எனவும் கொள்க.

5. புழலைப்

புழலேரியைப் போலும் பேரேரி பல்லவபுரத்தில் உள்ளது.

6. கழகச்சான்றோன் சங்கச் சான்றோர் என்பது மேலோர் வழக்கு; (பல்லவபுரத்தில்) பொதுநிலைக் கழகம் (சன்மார்க்க சங்கம்) நிறுவிய சான்றோன் எனவும் கொள்க.

7. தமிழாளி - தமிழை ஆளுநன். “அந்தமிழாளி” சேக்கிழார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/270&oldid=1595159" இலிருந்து மீள்விக்கப்பட்டது