உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மறைமலையம் -34 *

22

வண்டமிழ் ஆளும் நிலவரையில் வந்து புகுந்தோர் சிறுதெய்வ வணக்கமும் அவர்தாஞ் சிற்றுயிரை வதைக்கும் வேள்வி வெறியாட்டும் மண்டிய போலிப் பழங்கதையும்

மற்றுச் செந்தமிழ் முன்னோர்தம் மாண்புயர் முழுமுதல் வழிபாடும் மயங்கலின் மங்கிய தமிழர்நிலை

கண்டு வருந்திப் பேரறிவால்

கலைவளம் மிக்க 'தமிழர்மதம், 2காட்டி விளக்கி இனிதொழுகிக்

கடையேம் உய்ய அருள் செய்தோய்!

தண்டலை சூழும் தமிழ்நாட

தாலே தாலோ தாலேலோ!

தன்னே ரில்லாத் தமிழாளி

தாலே தாலோ தாலேலோ!

குறிப்புரை :

1. தமிழர்மதம்

அடிகளாரின் நூல்

தமிழர்மத மாநாட்டின் தலைமைப்பொழிவின் விரிவு.

2. காட்டி... - தமிழர் மதம் இதுவெனச் சுட்டிக்காட்டி விளக்கியது

மட்டுமன்றித் தாம் அந்நெறியில் ஒழுகிக் காட்டியமையும் குறித்தவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/271&oldid=1595160" இலிருந்து மீள்விக்கப்பட்டது