உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

23

புகழும் புலவர் பெருங்குழுவும் போற்றா ராய மறுதலையும் பொருவரும் ஆவல் மீதூர்ந்து பொங்கப் பெரிதங் காத்திருப்ப இகலொன் றில்லாப் 2பெருமலையின் இயக்கத் துற்ற நறும்பயனாய் இறவாப் புகழில் நிலைப்பிக்கும் இயல்பின தாய்நற் புதுமையதாய்

அகன்றாழ் 3அறிவுக் கடல்வந்த அரும்பொரு ளாய தமிழமுதம் அடையும் பேறு யாம்பெற்றேம் அண்ணல் நின்றன் பேரருளால் தகவினின் உயரிய தமிழ்ப்பெரும தாலே தாலோ தாலேலோ! தன்னே ரில்லாத் தமிழாளி தாலே தாலோ தாலேலோ!

குறிப்புரை :

1. மறுதலை அடிகளாரின் கொள்கைகட்குப் புறம்பாயினார்.

2. பெருமலை

3.

அறிவுக்கடல்

அடிகளார்.

அடிகளாரின் திங்கள் இதழ்.

இப்பாடற்கண் பிறிதொரு பொருள் (திருப்பாற்கடலைக் கடைந்த தொன்மக் கதை) அமைந்துள்ளமை காண்க.

247

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/272&oldid=1595161" இலிருந்து மீள்விக்கப்பட்டது