உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

67

ஈரெட் டெனுங்கலை வளர்தலே அன்றியும் இறங்குமுக முகங்கொள்ளுவாய்

இயம்புமக் கலைகள்தாம் நனிபழைய வேயன்றி எண்முனைப் புதுமையுண்டோ

பாரெட்டு மாதிரத் தினுமிரவு கொள்ளுவாய் பறவையுளும் ஒன்றனுக்கும்1

பசிப்பிணி யகற்றிடுந் திறநினக் கிலையெனப் பகர்வர்மற் றெங்கள்பெருமான்

2சீரெட் டிரண்டுடைய தமிழ்மகன் எண்ணருஞ் சிறப்புவளர் புதுமைக்கலைச்

செல்வனிர வறிகிலன் பிறவிநோய் மாய்வுறச் செந்நெறி உயிர்க்கருளுவன்

ஆரெட்ட முயலினும் ஒண்ணாத சீர்த்தியனொ(டு) அம்புலீ யாடவாவே!

அரியகற் றவர்கள் பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாடவாவே!

291

குறிப்புரை :

இப்பாடலும் பிரிப்பு (பேதம்) எனும் வாயின்முறை பற்றியது.

1. ஒன்றனுக்கும் - சகோரப் பறவை அம்புலியின் ஒளியையே கொள்ளும் என்பர்; அஃது அறிவியலாரால் மறுக்கப் பெறுகின்றது.

2. சீரெட்டு – சீர் + எட்டு + இரண்டு – பதினாறுவகைப் பேறு முன்னமே கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/316&oldid=1595205" இலிருந்து மீள்விக்கப்பட்டது