உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

69

ஒண்கதிர்ச் செல்வனில் லாமையின் ஓரிரவில் ஒளிநல்கு வையேனைநாள்

ஒளிகுன்றி உருவமுங் குறைவுற் றுலாவுவை ஓரிரவு காரிரவுகாண்

தண்டமிழ்ப் பேரொளி வழங்குமெங் குரிசிலது தடையுற்ற தில்லையறிதி

தங்கள் கண் மூடித் துயில்வோர் அறிந்திடத் தரமில்லை நின்னொளிக்கே

1கண்டுநிகர் மொழியனெம் பெருமகன் கட்டளையிற் கண்டுயில் வாருமறிவர்

2கார்கரக் குஞ்சிறுமை உடையையெம் நெஞ்சகக் 3காரொழித் தாளுமையன்

அண்டையில் நீவரப் பெருமனங் கொண்டனன் அம்புலீ யாடவாவே!

அரியகற் றவர்கள் பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாடவாவே!

குறிப்புரை :

இப்பாடலும் பிரிப்பு (பேதம்) எனும் வாயின் முறைபற்றியது.

1. கண்டு கற்கண்டு.

2. கார்

3. கார்

முகில். அறியாமை.

293

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/318&oldid=1595207" இலிருந்து மீள்விக்கப்பட்டது