உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மறைமலையம் -34 *

70

புலவர்கள் முதலாய பல்துறைப் பெருமக்கள் 'பூட்கையின் பொருவிலாதார்

புகலுமிவன் ஒருசொல்லை எதிர்நோக்கி நிற்பவும்

பூங்கை அசைத்தசைத்து

நலமிக்க செந்தமிழில் நின்னைவரு கென்றனன் நண்ணிலாய் என்னையென்று

நாடிப் புறக்கணிப் பறியின் 2கறுப்புகொடு 3நாட்டத் துறுத்து நோக்கி

நிலவுடைய நின்றிறம் அழிக வென வாய்மொழி நிகழ்த்துமேல் நிகழ்வதுறுதி

நில்லா திதோவந்த னன்னென் 4றிறைப் பொழுதும் நீடியா தோடிவிரைவாய்

அலகிலாப் பெருமைசால் நிறைமொழியன் இவனொடும் அம்புலீ யாடவாவே!

அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாட வாவே!

குறிப்புரை :

இப்பாடல் ஒறுப்பு (தண்டம்) எனும் வாயின் முறை பற்றியது.

1. பூட்கை கொள்கை.

2. கறுப்பு

"கருப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள" - தொல்.

3. நாட்டம் - கட்பார்வை.

4. இறைப்பொழுது

சற்றுநேரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/319&oldid=1595208" இலிருந்து மீள்விக்கப்பட்டது