உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • பிள்ளைத்தமிழ் இறைகுருவனார்

8. சிற்றிற்பருவம்

71

இல்லற மென்னும் நல்வாழ்வை

இனிது நடாத்தும் முறைகற்பான் இளையேங் குழுமி யீண்டுற்றே இழைத்தேஞ் சிற்றில் அல்லாது

நல்லரும் இன்றமிழ் பயிலுவதில்

நாளும் பணிசெய முயலுவதில் நாட்டம் இன்றி விளையாட்டை

2நயந்திது செய்தோம் அல்லேமால் சொல்லரு மாண்பிற் பொதுமறையாய்த் தூய்மையின் ஓங்கிய வள்ளுவனார் சொல்லிய வாய்மைப் பெருமொழியாம் தொழுதுல கேத்துங் குறணூலால்

செல்லரு மாப்புகழ்த் தமிழ்நாடா

சிறியேஞ் சிற்றில் சிதையேலே!

சிவநெறி தழைய வந்தவருட்

செல்வா சிற்றில் சிதையேலே!

குறிப்புரை :

1. கற்பான் பானீற்று வினையெச்சம்.

2. நயப்பு விருப்பு.

295

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/320&oldid=1595209" இலிருந்து மீள்விக்கப்பட்டது