உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

மறைமலையம் -34 *

100

புகழ் கொண்ட பெருமநீ போற்றவளர் செம்மை பொருந்துநற் றிருநெறியொடும்

புதுமைகொள் பழந்தமிழ் மேன்மேற் றழைந்தொளி பொலிந்தினிது நீடுவாழ

நிகழ்கின்ற காலத்தும் முன்னையும் பின்னையும் நின்வழித் தொண்டு செய்யும்

நிறைதமிழ்ப் பெரியோர்தம் புகழ்வாழ மற்றுநின் நிறுவனம் பலவாழநின்

அகழ்வுற் றகன்றவுயர் நுண்ணறிவி னாலெமக்(கு) அருளிச்செய் பெருநூல்களும்

ஆங்கவற் றுட்பொருள் தாங்கிவரு நூல்களும் ஆராய்ச்சி நெறியும்வாழ

திகழ்கின்ற வள்ளுவர் ஆண்டுமுறை வாழநற்

சிறுதேர் உருட்டியருளே!

செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!

குறிப்புரை :

அடிகளார் தாம் போற்றி வளர்த்த சிவநெறியும் தமிழும் நீடு வாழ; அடிகளாரைப் பின்பற்றி அவர்வழி நின்று பணியாற்றிய யாற்றும் பெருமக்கள் புகழ் வாழ; அடிகளார் தாம் நுணுகி ஆராய்ந்து அருளிச் செய்த நூல்களும், அந் நூல்களை அடியொற்றி எழுந்த நூல்களும் ஆய்வுகளும் வாழ; அடிகளார் வகுத்தளித்த திருவள்ளுவர் ஆண்டுமானம் வாழ என்னுமாறு.

மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/349&oldid=1595238" இலிருந்து மீள்விக்கப்பட்டது