உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

7

மக்கட் பிறவியிலேஅறிவும் விருப்பமுஞ் செய்கையும் அழகுடன் தோன்றுவது மிகுதியோ அழகின்றித் தோன்றுவது மிகுதியோ என்று நாஞ் சிறிது ஆராய்ந்து பார்ப்போமாயின், அவை அழகின்றித் தோன்றுதலே மிகுதியாய்க் காணப்படுகின்றது. அழகான அறிவுடையாரையும், அழகான விருப்ப முடை யாரையும், அழகான செய்கையுடையாரையுங் காண்பது அரிதினும் அரிதாயிருக்கின்றது. மக்களிற் பெரும்பாலார் அழகல்லா அறிவு விழைவு தொழில்களையே மிகுதியும் உடையராய் யராய் இருக்கின்றனர். இப்படி எல்லாரும் அழகல்லாத வற்றையே அறிந்தும், விரும்பியுஞ், செய்தும் வருகின்றாராயினும், அழகான அறிவு விழைவு செயல்களைப் பிறரிடங் காணும்போது அவர்கள் அவற்றிற்காக அவர்களிடம் மிகுந்த நன்கு மதிப்பும் விருப்பமும் வைத்து அவர்களுக்கு அடங்கி நடக்கின்றார்கள்.

ஃதென்ன புதுமையென்றால், மாந்தர் தம்மைப் போலவே நடக்கும் பிறரைக் கண்டால் அவர்களிடத்துச் சிறந்ததொன்றும் இல்லாமை பற்றி அவர்களைக் கருதிப் பாராமற் போகின்றனர். ஒவ்வொருவரும் அழகல்லாத வற்றையே செய்து வருதலால், எல்லார்க்கும் பொதுவான அச்செய்கையின் காரணத்தாலே ஒருவர் மற்றொருவரை உன்னிப்பதற்கு இடமில்லாமற் போகின்றது. இதனை ஒரு நிகழ்ச்சியில் வைத்து விளக்கிக் காட்டுகின்றோம். ஒரு நகரத்தின் கடைத்தெருவிலே அந் நகரத்திலுள்ள குடிமக்கள் போய்த் தத்தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுக்கொண்டு போகும்போது ஒருவரையொருவர்

கருதிப் பாராமற்

செல்கின்றனர். ஏன் அங்ஙனம் அவர்கள் தம்மிலே ஒருவரை மற்றொருவர் உன்னியாமற் செல்கின்றனர்? எல்லாரும் ஒரே வகைப்பட்ட நடையுடை பழக்கம் உடையராக இருத்தலால், ஒருவரையொருவர் உன்னிப்பதற்கு அங்கே இடமில்லாமற் போகின்றது. அவ்வாறு அவர்கள் போய்க்கொண்டிருக்கையில் அத் தெருவிற் சடுதியிலே சீனதேசத்து மகனார் ஒருவர் வரக் கண்டால், ஒருவரையொருவர் பாராமற் சென்ற அந் நகரத்து மக்களெல்லாம் அங்கங்கே நின்று அவரை உன்னித்து நின்று பார்ப்பதைக் கண்டிருக்கின்றோம். அன்றோ? ஏன்? அச் சீனக்காரரின் வடிவமும் நடையுடை பழக்கங்களுந் தம்மின் வேறான பான்மையுடன் காணப்படுதலினாலேயே அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/40&oldid=1575992" இலிருந்து மீள்விக்கப்பட்டது