உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் – 4

பெருந்தவம் வாய்ந்தோர் வானவூர்தி ஊர்ந்து துறக்க வுலகஞ் செல்வர் எனப் புறநானூற்றில் அவரது புகழ் வியந்து சொல்லப் பட்டது. நல்லிசைப் புலவர்கள் வருந்துமாறு பெரும்பிழை செய்தவர்கள், அவர்களால் வையப்பட்டு இவ்வுலக வாழ்க்கையை விட்டு நீங்குதலேயன்றி நிரயத் துன்பத்திலும் பட்டு உழல்வர் என்பதற்குத் தமிழை யிகழ்ந்து நக்கீரரால் வசைபாடப் பட்டவன் வரலாறே சான்றாமன்றோ? இங்ஙனம் எல்லாம் வல்லாராகிய நல்லிசைப் புலவரின் ஆற்றலும் அருமையும் உணர்ந்தன்றோ, தாமப்பல்கண்ணனார் என்னும் புலவர் வெகுண்டபோது தானும் வெகுளாது பொறுத்திருந்து அவரைப் பணிந்து பிறகு அவராற் புகழப்பட்டான் மாவளத்தான் என்னுஞ் சோழ மன்னன்? இன்னுந் தனது கட்டிலின் மேல் ஏறி உறங்கிக் கிடந்த மோசிகீரனார் என்னும் புலவரை எழுப்பாமல் அவர் உறங்குமளவும் அவர்மேற் றானே கவரி கொண்டு வீசிய பெருஞ் சேரலிரும்பொறை என்னுஞ் சேர மன்னன் செயலை உணருங்காற், பண்டைக்காலத்து அரசர்கள் நல்லிசைப் புலவர்களின் அருமையை உணர்ந்து அவர்களை எங்ஙனம் நன்கு மதித்து வந்தார்கள்! என்பதனை இனிது அறிகின்றனம் அல்லமோ? நல்லிசைப் புலவர் தமக்கு உள்ள உள்ள ஒருமையின் வலிவு மிகப் பெரிதாகலின், அவர் அதன்றுணையாற் செயற்கரிய செயல்கள் எல்லாஞ் செய்யவல்லராவர் என்று

உணர்க.

னி, அங்ஙனமெல்லாஞ் சிறந்த நல்லிசைப்புலவர் களைக் காட்டினும் உள்ள வொருமை வலிவில் மேம் பட்டவர்கள் முற்றத்துறந்த முனிவர்களேயாவர். இவர் கள் புறம்பே உள்ள உலகியற் பொருள்களில் தமது உணர்வை ஒரு சிறிதும் ஓடவிடாமல், எந்நேரமும் அதனை அகத்தே திருப்பி அங்கே உணர்வுக்கு உணர்வாய் விளங்கும் இறைவன் றிருவருளாகிய உள்ளொளியை இடையறாது நாடியிருப்பர். அங்ஙனம் அவர்களால் நாடப்படுவதாகிய திருவருள் ஒளியானது தனக்கு ஒப்பும் உயர்வும் இன்றி விளங்கும் இறைவனது உண்மைத் தன்மையேயாகும். அத் திருவருள் ஒளியே இ வல்லா உலகங்களையும் ஆக்குவதும் அழிப்பதும் அருளுவதுஞ் செய்வது. அதனுடைய அறிவுக்கும் அதனுடைய ஆற்றலுக்கும் ஓர் எல்லையே இல்லை. அதுவே

நிலைப்படுத்துவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/61&oldid=1576013" இலிருந்து மீள்விக்கப்பட்டது