உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

29

மிகவும் இரக்கம் உள்ள இறைவனது குணமும் ஆகும். இத் தன்மைத்தாகிய இறைவனது திருவருள் ஒளி ஒன்றுமே என்றும் மாறாமல் ஒரு தன்மையாக விளங்கும் பேரின்பப் பொருள் ஆகும். இதனிடத்தே கிடந்து சுழலும் இவ்வுலகும் இவ்வுலகின் வேறான எண்ணிறந்த மேலுலகுகளும் நிலையில்லாத பருப் பொருள்கள், இவற்றிற்கு அறிவு இல்லை. இவைகள் ஒவ்வொரு நொடியும் மாறிக் கொண்டே இருக்கின்றன. சில பிறக்கின்றன, சில இருக்கின்றன, சில அழிந்துபோகின்றன. அழிந்தவை திரும்பவும் பிறக்கின்றன, இருக்கின்றன, இறக்கின்றன. இவற்றிடையே அகப்பட்டுக் கொண்டு கூடச்சுழலும் உயிர்களோ அறிவுடையன; என்றாலும் இவை தமது அறிவு ஓர் இருளினால் மறைக்கப்பட்டு இருத்தலால், நிலையில்லா இவ்வுலகங்களையே தமக்கு நிலையாக மருண்டு எண்ணி மிகவுந் துன்புற்றுச் சுழல்கின்றன. தமது அறிவு ஒருநிலைப்பட்டு நிற்கமாட்டாமற் குரங்கு போலவுங் காற்றாடி போலவுஞ் சுழன்று, நிலையில்லாத இவ் வுலகங்களில் அலைந்தலைந்து திரிகின்றன. நிலையற்ற வுலகத்தைத் துணையெனச் சார்ந்தமையாலன்றோ இவ்வுயிர் களின் அறிவும் நிலையற்ற தன்மையுடையதாகி இடர்ப்படு கின்றது? அவ்வாறன்றி, என்றும் ஒரே தன்மையாக விளங்கும் இறைவன் திருவருள் ஒளியையே துணையெனக் கொண்டு அதனையே இடையறாது சார்ந்து நிற்குமாயின், இவ் வுயிர்களின் அறிவு அத் திருவருள் ஒளிவயமேயாகி மாறாத பேரின்ப வடிவாயே நிற்குமன்றோ? அப்போது அதற்குத் துன்பமும் அதற்குக் காரணமாகிய அறியாமையுந் தொலைந்து அறிவே தன் உண்மை வடிவாக் கொண்டு துலங்குமன்றோ? இவ்வுண்மை களை முற்றும் உணர்ந்த முனிவர் இவ்வுலகங்களையும் இவ்வுலகத்துப் பொருள்களையும் ஒரு பொருட்டாக நினையாது திருவருள் ஒளியிலேயே தமதறிவைத் தோய்த்து அதனை நோக்கியவாறாகவே நிற்கும் உள்ள வொருமையினும் பெரியது வேறு உண்டோ சொல்லுமின்!

அங்ஙனந் திருவருள் ஒளியினையே நோக்கியிருக்கும் அவர் உடம்போடும் உலகத்தோடும் கூடியிருப்பினும், அவை அவரைச் சிறிதும் வருத்தவல்லன அல்ல. அவர்களுடம்பினுள்ளே ள அருள் ஒளியான தெய்வநெருப்பு நிறைந்து பரவியிருத்தலால், வெளியே தோன்றும் வெப்ப தட்பங்கள் அவருடம்பிற்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/62&oldid=1576014" இலிருந்து மீள்விக்கப்பட்டது