உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் – 4

சென்று திருவள்ளுவநாயனார் அவரது நினைவின் நிலையைத் தமது அறிவுக்கண்ணாற் கண்டு, 'செட்டியார் வழிபாட்டில் ல்லை, கடைக்கணக்கிலிருக்கின்றார்' என்று சொல்ல, அதுகேட்ட ஏலேலசிங்கர் தமது நினைவின் உண்மை கண்டு கூறிய ஆசிரியரைப் பணிந்தனர் என்னும் வரலாறு யாம் உரைப்பதன் உண்மையை இனிது புலப்படுத்தும். அவ்வளவு கூடப் போக வேண்டாம் இதனைப் பயிலும் ஒவ்வொருவருஞ் சிறிது நேரந் தனியே யிருந்து, தமது நினைவை உள்ளே இழுத்துத் திருப்பிப் பார்க்கட்டும். வெளிச்செல்லும் நினைவை உள்ளே இழுத்து இறைவன் திருவுருவிலே நிறுத்த முயலும் அந்தப் பொழுதே தாம் பற்றுவைத்த பொருள் நினைவுகள் ஆயிரம் ஆயிரமாகக் கிளைத்துத் தமதுள்ளத்தைச் சூழ்ந்து கவிந்து கொள்வதை அவர்கள் எளிதிற் கண்டு கொள்வார்கள் அல்லது கோயிலுக்குள்ளே கடவுளைத் தொழச் செல்வோரைச் சிறிது நேரம் உன்னித்துப் பாருங்கள். அங்கே இறைவனைத் தாழப்புகுந்த அவர்கள் அந் நினைவை மறந்து, தொழில் நிலைகளைப் பற்றியும் வாணிக வருமானங்களைப்பற்றியுந் திருமண நிகழ்ச்சிகளைப் பற்றியும் அரசியல் முறைகளைப் பற்றியும் இன்னும் எத்தனையோ எண்ணற்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும் இடைவிடாது பேசிக் கொண்டு செல்வதைக் காணலாம். கடவுளின் எதிரே சென்று அவர்கள் கைகூப்பித் தொழுகையிலுங் கூடத் தம் நினைவில் வெளிப் பொருள் எண்ணங்களையே நிரப்பிவிடுகின்றனர். கோயிலுக்குச் செல்வோரிற் பலர், பிறர் தம்மை மெச்சிக்

கொள்வரென நினைந்துந் தம்மைக் கடவுளடியார் என்று மயங்கிப் பலருந் தமக்கு பொருளுதவி செய்வரென எண்ணியும், உலகத்தாரைப் பல வகையில் வஞ்சிப்பதற்கு அஃது ஏற்றதொரு வழியெனக் கருதியுமே அங்கே செல்கின்றனர். உண்மையன்பால் உள்ளம் உருகி உணர்வை ஒருவழி நிறுத்திக் கடவுளைத் தொழுதற் பொருட்டாகவே செல்லும் உண்மை அடியார் உலகில் மிகச் சிலர். இவற்றிற் கெல்லாங் காரணம் யாது? புறப்பொருள்களிற் பற்று மிகுதியும் வைத்தலேயன்றி வேறென்னை என்க.

அவ்வாறாயிற், பற்றுவைத் தொழுகுதலுக்கும் பகுத்தறிந் தொழுகுதலுக்கும் வேறுபாடு என்னை யென்றால் அதனை முன்னே விளக்கிக் காட்டினாமாயினும், பின்னும் அதனையே ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/67&oldid=1576019" இலிருந்து மீள்விக்கப்பட்டது