உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

35

உலக

எடுத்துக்காட்டில் வைத்து விளக்கிக்காட்டுவாம். இயற்கையழகினை நேரே கண்டு மகிழ விரும்பிய புலவன் ஒருவன் ஒரு கானகத்தை நாடிச்செல்ல, அங்கே ஓடும் ஒரு கான்யாற்றின் கரையிலே பச்சென வளர்ந்திருக்குங் கொழும்புல்லைப் பொன்னிறமான புள்ளிமான் ஒன்று மேய்ந்துக் கொண்டிருக்கக் கண்டு, அதன் அழகினையும் அதனைப் படைப்பித்த இரக்கமுள்ள தனிப்பெருங் கடவுளின் பேரருட்டிறத்தினையும் நினைந்தவாறாய் மகிழ்ந்திருக்கும் நிலையே பகுத்தறிந்து ஒழுகுதலாகும். அப்புலவன் அவ்விடத்தைவிட்டுச் சென்றபின் அங்கேயுள்ள வேடன் ஒருவன் அவ்விடத்தே வந்து அம்மானைக் கண்டு அதன் கொழுவிய தசையினைத் தின்ன விழைந்து அதனைக் கொல்லக் கருதும் நிலையே பற்றுவைத்து ஒழுகுதலாகும். பகுத்தறிந்தொழுகும் நிலையில் உலக இயற்கையின் அழகையும், அவ்வியற்கையிற் காணப்படும் ாருள்களின் அமைப்பின்றிறத்தையும், எல்லாவுயிர்களிடத்தும் இரக்கம் வைத்துள்ள ஆண்டவனின் அருட் பெருந்தகை மையையும் அறிவதிற் கருத்து ஊன்றித், தமக்கென ஒன்றையும் வேண்டாமல் அவ்வாண்டவனின் அருள் வழிப்பட்டு நிற்பதில் ஒருவரின் அறிவு முயற்சி செல்லுதலால், அந்த நிலையிலேயே பழகி வருகின்றவர்களுக்கு அவர்களது புறப்பொருள் அறிவானது அவர்கட்கு எவ்வகையிலுந் தீமையை விளைவியாமல், அவர்கள் அதனை அகத்தே திருப்புங்காலத்தும் அஃது எளிதாகத் திருவருளிலே படிந்து நிற்கும் . பற்றுவைத்து ஒழுகும் நிலையில் ஒருவரின் அறிவு முயற்சியானது பிறவுயிர்களின் நன்மை தீமைகளைக் கருதாமல் தம்முடைய நன்மையையே மிகவுங் கருதி, உலகவியற்கையழகையும் அதிலுள்ள பொருள்களின் அமைப் பின் றிறத்தையும் அவற்றைப் படைப்பித்த ஆண்டவனின் அருட்டன்மையையுஞ் சிறிதும் நினையாமல் அறியாமை வயப்பட்டு ஒழுகாநிற்கும். இந்த நிலையில் தனக் கன்று

எந்தப்பொருண்மேல் நாட்டம் ஓடியதோ, அந்தப் பொருள் தனக்குக் கிட்டும் பொருட்டுப் பலவகையால் அல்லல் உழந்தும் பல தீமைகளைப் பிறவுயிர்கட்குச் செய்தும், அது கிட்டாவிடிற் பெரிதும் மனம் உளைந்தும் வருதலால், இந்நிலையில் நின்றவன் தன் பகுத்தறிவுணர்ச்சிகளை உள்ளே மடக்கி, இறைவன் அருளொளியிலே அவற்றை நிறுத்த முயல்வனாயின் அஃது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/68&oldid=1576020" இலிருந்து மீள்விக்கப்பட்டது