உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி

59

பொருளீட்டும் முயற்சிகளெல்லாம் அக் கல்வியறிவைப் பெறுவித்தற்கு இசைந்த சைந்த உதவி உதவி நோக்கங்களாயிருத்தல் கடனாகும். எனவே, கொண்டு விற்றல், உழவு, கைத்தொழில் முதலிய முயற்சிகளைச் செய்வோருஞ் செய்யும் நோக்கம் உடையோரும், இந் நோக்கங்களைக் கல்வியோடொத்த முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல் அதனைத் தருதற்கு இசைந்த கருவிகளாகவே கொள்ளல் வேண்டுமென்பதும், அங்ஙனங் கொண்டால் இம் முயற்சிகளும் முட்டின்றி நடைபெற அழியாச் செல்வமாகிய கல்வியறிவும் முறை முறையே வளர்ந்து நிரம்பும் என்பதும் அறியப்படும்.

னிக் கல்விப்பேற்றில் நிலைநின்ற எண்ணமே முதற் பேரெண்ணமானால், இவ்வுலக வாழ்க்கையில் நிறைவேற்று வதற்குரிய பலவகை முதன்மையான பல பெருங்கடமைகளையும் எங்ஙனங் கொள்வதெனின், அதனை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கிக் காட்டுதும். ஓர் அரசன் நடத்தும் அரசியலில் அமைச்சன் முதல் ஊர்காவற்காரன் ஈறாக உள்ள ஏவலாளரில் ஒருவர் ஒருவரை நோக்க உயர்ந்தவராய்ச் சென்று அமைச்சரில் முடிய, அவ்வமைச்சரிலும் உயர்ந்தோர் அரசராய் முடிந்து நிற்றல் போல, இவ் வுலகவாழ்வில் நடைபெறும் முயற்சிகளும் அம்முயற்சிகளைப் பற்றிய எண்ணங்களும் ஒன்றில் ஒன்றுயர்ந் தனவாய்ச் சென்று கடைசியாகக் கல்வியறிவு பெறுதலிலே தனி முடிந்து நிற்கும். ஆகவே, அவ்வக்காலங்களில் அவ்வவ் L ங்களில் தனித்தனியே முதன்மையுற்றுத் தோன்றும் முயற்சிகளும் அவற்றிற்குரிய எண்ணங்களும் பலப்பல உள. என்றாலும், ஒரு காலத்து ஓரிடத்துத் தோன்றும் முயற்சியும் அதனைத் தொடர்ந்த எண்ணமும் வேறொரு முயற்சியையும் வேறொரெண்ணத்தையுங் கலவாமல் முதன்மை பெற்று ஒருவரிடத்தே தோன்றப் பெறுமாயின் அவை இனிது நிறைவேறி இன்பம் பயக்கும் என்பதே இங்கே, கூறியதன் கருத்தாகும். ஒரு முயற்சியை ஒரு காலத்துச் செய்யப் புகுந்தவர் அதன்கண்ணே தமது கருத்தைப் பதியவைத்து அதனை நடத்துதலாலேதான், வ்வுலகத்திற் பலதிற முயற்சிகளும் நன்கு நடைபெற்று வருகின்றன. இம் முயற்சிகளின் நிறைவேற்றத்தாற் பலரும் பலவகை நன்மைகளை அடைந்து இன்புறுகின்றனர். முயற்சியிற் கருத்து ஊன்றப் பெற்றவர், அதனோடு வேறு பல

L

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/92&oldid=1576044" இலிருந்து மீள்விக்கப்பட்டது