உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் -4

வண்ணத்தைக் கைகூட்டுவனவாய் அதனோடு யை புடைய வேறு சிலவற்றைத் தீரத்தெளிய ஆராய்ந்து பார்க்க லாமேயல்லாமல், அதற்கு இயைபில்லாதனவற்றை ஒரு சிறிதும் எண்ணலாகாது. அன்றி அவ்வாறெண்ணினால் அவர்கொண்ட முதன்மையான எண்ணம் பழுதுபட்டுப் போக, அவரெண்ணியது எண்ணியவாறே முடியமாட்டாது. எனவே, ஒன்றை நிறைவேற்ற முயலுபவர் அது முற்றுப் பெறும் வரையில் அதனையன்றி வேறு அதுபோல் முதன்மையான மற்றொன்றனை எண்ணலாகாது. கல்வியில் வல்லராக விரும்பும் ஒருவர் அந் நோக்கம் ஈடேறும் வரையிற் பிறிதொன்றனையும் நாடாது அதனிடத்து மட்டுமே கருத்துஊன்றி நிற்றல் வேண்டும். அவ்வாறன்றி அதனோடு கூடவே காண்டு விற்றலுஞ் சய்து பொருளீட்ட வேண்டுமென்னும் நோக்கமுங் கொள்வராயின், இரண்டும் நிறைவேறப்பெறாமல் துன்புறுவர். அங்ஙனமாயிற் கொண்டு விற்றல் செய்யும் எண்ணமுள்ளவர் அதனோடு கூடக் கல்வி பயிலும் எண்ணமும் உடையராதல் குற்றம் ஆகுமாவெனின், குற்றமாகாது. உலகத்தின்கண் உள்ள எத்தகைய முயற்சியும் நன்கு நடைபெறுதற்குக் கல்வியறிவு உடைமையே ஒப்பற்ற கருவியாகும். ஆதலால், மக்களாய்ப் பிறந்தவர் எல்லாருந் தமது பிள்ளைமைப் பருவந் தொட்டு இளமைப் பருவம்வரையில் இடையறாது பயின்று கல்வியறிவை நிரப்பிக்கொண்டு, அதன் பிற்பொருளீட்டும் முயற்சியிற் புகுதல் வேண்டும். கல்வியறிவு பெறுதலே மக்களெல்லார்க்கும் முதற்பெரு நோக்கமாய் இருத்தல் வேண்டும். அவ்வரும்பெரும் நோக்கம் ஈடேறுமுன் பாருள் தேடப் புகுவோரது செயல் பெரிதும் இரங்கற்பால தொன்றாம். அறியாமையென்னும் பேரிருள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையிற் கல்வியென்னும் நந்தாமணிவிளக்கங் கை யிலின்றிப் புகுவோர் தீவினைப் படுகுழிகளில் வீழ்ந்து பெரிதும் வருந்துவர். ஆதலாற், கல்வியறிவு நிரம்பிய பின்னரேதான் பொருள்தேடுந் துறைகளிற் செல்லல் வேண்டும். அஃது உண்மையேயாயினுங் கல்வியறிவு பெறாமுன்னே பொருள் ஈட்டும் முயற்சியிற் புகுந்த பின்னர்க் கல்வியருமை யுணர்ந்தால் அதனைக் கற்குமாறு யாங்ஙனமெனின், எல்லா மாந்தர்க்குங் கல்வியறிவு பெறுதலே முதற்பெரு நோக்கமாயிருத்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/91&oldid=1576043" இலிருந்து மீள்விக்கப்பட்டது