உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

25

பாருங்கள்! சிலர் பிற வுயிர்களின் உடம்பைச் சிதைத்துக் கொண்டுவந்த இறைச்சியை எவ்வளவு விருப்பத்தோடு உண்கின்றார்கள்! கொலைத்தொழிலாற் பிறவுயிர்கள் படுந் துன்பத்தைச் சிறிதாயினும் ஆழ்ந்தறியும் அறிவு இருந்தால் அவர்கள் அப்படிச் செய்வார்களா? ஆகையால், இறைச்சி யுண்பவர்கள் சிறிதும் அறிவில்லாதவர்கள் என்பது பெறப்படு கின்றதன்றோ? பிற வுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உண்டு பிழைக்கும் புலி, அரிமா முதலான வல்விலங்கின் காடுமையையும் அறிவின்மையையும், புற்பூண்டு தழை வைக்கோலைத் தின்று பிழைக்கும் யானை, குதிரை, மாடு முதலிய மெல்விலங்குகளின் அமைதியையும் அறிவுடைமையையுஞ் சிறிது கருதிப்பாருங்கள்! சுவைதெரிந்து உண்ணப்படும் மெல்லிய இனிய காய்கறி உணவுகளால் உயிர்களுக்கு அறிவு மிகுதிப்படுமாகலின், வாயுணர்வினை இம்முறையால் அறிந்து நுண்ணிதாக்கவே அதனால் மனவுணர்வும் நுண்ணிதாகி மனவெளியிற் பொருந்தி முக்கால நிகழ்ச்சிகளையும் அறியவல்லதாகும்.

னி, மூக்குணர்வும் பரும்படியாக நடைபெறவிடாமல் அதனை நுட்பப்படுத்தல் வேண்டும். இப்போது நிலஉலகில் உள்ள மக்களிற் பெரும்பாலார்க்கு இவ்வுணர்ச்சி மிகவும் மழுங்கிக் கிடக்கின்றது. மக்களினுந் தாழ்ந்த சிற்றுயிர்கள் மாட்டுக் காணப்படும் இவ்வுணர்வின் சுருசுருப்புக்கூட மக்களிடத்தில்லாமை பெரிதும் வருந்தத் தக்கதொன்றாம்! நாயானது தன் தலைவன் சென்ற வழியை மோப்பத்தால் அறிந்து அவனிடஞ் செல்கின்றது; கள்வர் திருடர் நெடுந் தொலைவில் வரும்போது அவரது வருகையை மோப்பத்தால் அறிந்து குரைக்கிறது. கண் இல்லாத எறும்புகள் மிகவுங் கருத்தாய்த் தொலைவில் வைக்கப்பட்ட நெய்க்குடுவையை மோப்பத்தால் தெரிந்துகொண்டு அதனிடஞ்சென்று அதனை மொய்த்துக் கொள்கின்றன. இங்ஙனந் தொலைவில் நிகழும் நிகழ்ச்சிகளையும் வெறு மோப்பத்தால் அறியும் ஏழையும் உயிர்களின் அறிவுகூட மக்களிடங் காணப்படாதிருக்க, இவ்வேழை மக்கள் தம்மை உயர்வாகக் கருதி இறுமாந்திருத்தல் என்ன தீவினை! தமக்குப் பின்னும் முன்னும் பக்கத்தும் வரும் இடர்களையே அறிய வலியற்றவர்களாய் இருக்கின்றார்கள்! தம்மைச் சுற்றிலும் மிகவுந் தீநாற்றஞ் சூழ்ந்து கொண்டு தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/58&oldid=1576542" இலிருந்து மீள்விக்கப்பட்டது