உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் – 5

உயிரின் வலிவை உரிஞ்சிக் கொண்டிருக்கவும், அதனை உணராமல் மூக்குணர்வு மழுங்கிக்கிடக்கும் இவர்கள் நிலைமை மிகவும் இரங்கற்பாலது! எனவே, 6 மூக்குணர்வினை

நுட்பப்படுத்திச் சுற்றிலும் நிகழும் நிகழ்ச்சிகளை நாற்றத்தின் வாயிலாக உணர்ந்துவரின், அதனால் மனவெளி நுட்பமாகி மனவெளியைப் பொருந்தி நெடுந் தொலைவில் உள்ளவற்றையும் எளிதிலே அறியும்.

இனிக்,

கண்ணுணர்வினையும்

பருப்பொருட் காட்சியினின்றும் மேல் எழச்செய்து நுண்பொருட் காட்சியிற் பழக்கிவரல்வேண்டும். பருப்பொருள்களான கல், மண் முதலியவற்றைக் காணுமிடத்தும், அவற்றில் மிகச் சிறிய பொருள்களை உற்றுப்பார்க்கப் பழகுக. முதலில் அழகிய சிறு கூழாங் கல்லைச் சிலநாள் உற்றுப்பார்த்தும், அதன் பிற் சிறிய மண்துகள் பொற்பொடி முதலியவற்றிற் பார்வை வைத்தும், அதன்பின் தாமரையிலைமேல் நீர்த்துளியை விட்டு அதனை நோக்கியும், அதன் பின் விளக்கின் கொழுந்தைக் கருத்தூன்றிப் பார்த்தும் இங்ஙனம் முதன் மூன்று உள்பொருள்களை நோக்கும் முகத்தாய் கண்ணுணர்வினை நுட்பப்படுத்தி வரல்வேண்டும். எல்லார்க்குங் கண்ணானது மிகச் சிறந்த உறுப்பாகையால், அதனைச் சடுதியிலே நுட்பப்படுத்த முயன்றால் பன்னாளும் பருப்பொருளிலேயே பழகிய அதனுணர்வு, திடீரென நுண் பொருட் காட்சியிற்றிரும்புதலால் மழுக்கம் அடைந்து கெட்டுப்போனாலும் போகும். ஆதலால், இதனை நுண்பொருட் காட்சியிற் பழக்குவது படிப்படியாக நிகழும்படி மிகவுங் கருத்தாக மெல்லெனச் செய்துவரல் வேண்டும். ஆனதுபற்றியே, துவக்கதிற் கல், மண் முதலான நிலத்துப் பொருள்களிலும், அதன்பின் நீர்த்துளி நெய்த்துளி முதலான நீரியற் பொருள் களிலும், அதன்பின் விளக்கொளியாகிய தீப்பொருளிலும் பழக்கி வரும்படி கூறினாம். இங்ஙனம் முதன்மூன்று பொருள்களிற் பழகி வந்தபின், கட்புலனுக்குத் தென்படாத இடைவெளியை உற்று நோக்கத் துவங்குக. புறப்பொருள்களில் டை வெளியை உற்றுநோக்குதல் ஒன்றே கண்ணுணர் வினையும் அதன் வாயிலாக மனவுணர்வினையும் நுட்பப்படுத்துதற் குரிய மிகச் சிறந்த பழக்கமாகும் என்று உணர்மின்கள்! இவ்வாறு கண்ணுணர்வினை நுட்பப்படுத்திய பிறகு நெடுந்தொலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/59&oldid=1576551" இலிருந்து மீள்விக்கப்பட்டது