உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

27

விலுள்ள பருப்பொருள்களை உற்றுநோக்கவும், அதன்பின் தொலைவிலுள்ள நுண்பொருள்களை உற்றுநோக்கவும் பழகி வருக. இதிற் பழக்கம் முதிர்ந்தபின், நிலாக் காலத்து இரவில் நுண்ணிய பொருள்களை நோக்கப் பழகிவரல் வேண்டும் அதுவுங் கைவந்தபின் நிலவில்லாத இருட்காலத் திரவில் முதலிற் பருப்பொருள்களையும் அதன்பிற் சிறுபொருள் களையும், அதன்பின் மிகச்சிறிய பொருள்களையும், அதன்பின் நுண் பொருள்களையும் உற்றுநோக்கிப் பழகி வருக. இங்ஙன மெல்லாம் பழகிக் கண்ணுணர்வு நுட்பமாய் வலுப்பட்ட பின்னர், அக் கண்ணுணர்வு தொலைவிலும் அருகாமையிலும் உள்ள எவ்வகைப்பட்ட பொருள்களையுங் காண வல்லதாகும். ஏனைமக்களின் கண்ணுணர்வுக்குப் புலனாகாதனவும் இங்ஙனம் பழகினவர் கண்ணுணர்வுக்கு எளிதிற் புலனாம். இது கைவந்தவுடனே பார்வை செல்லாமற் நடுநின்று மறைக்குஞ் சுவர் மலை, காடு நாடு முதலியவற்றிற்கு அப்பாலுள்ள பொருள் களையுந் தாம் காண்பதாகத் தமது கட்பார்வையினை ஒரு முகமாக வைத்து எண்ணிவரப் பழகுக. இப் பழக்கம் முதிர்ந்தபின் அது கைவரப் பெற்றவர் ஒரு தேயத்தில் ஓரிடத்திலிருந்தே எத்தேயத்தும் எவ்விடத்தும் நிகழும் நிகழ்ச்சிகளை யெல்லாங் கண்டுணர வல்லராவர்.

இனிச், செவியுணர்வினை நுட்பப்படுத்தப் பழகுதல் கண்ணைப் பழக்குதலினும் எளிதாவதாம். கண்ணுணர்வு மிக நுண்ணிய பொருள்களைக் காணும்படி பழக்குங்கால் படிப்படியே செல்லாவிட்டால், கண்ணுறுப்புத் தன்நிலை குலைந்து கெடும். மற்றுச் செவியோ நுண் ஒலிகளைக் கேட்கும்படி பழக்கப்படுவதிற் சிறிதுங் கெடாது. ஆகையால், அருகே தோன்றும் நுண்ணொலிகளையுந் தொலைவே தோன்றும் நுட்ப ஓசைகளையுங் கருத்தூன்றிக் கேட்டலில் அச்சமின்றி யாரும் பழகலாம். ஏனையோர் செவிகளுக்குப் புலனாகாத மிக நுண்ணிய ஒலிகளையுந் தாங் கேட்பதாக எண்ணி ஒரு தொடர்பாகப் பழகிவரவே சில காலத்துள் எல்லாம், அருகிற் சில சிற்றுயிர்கள் இடும் ஒலிகளுந் தொலைவிற் றோன்றுஞ் சிற்றொலி பேரோசைகளுந் தெளிவாக வந்து செவிப் புலனிற்றோன்றும். இவ்வரிய பேறு கைவரப் பெற்றமை யினாலன்றோ தவ தவவொழுக்கத்தில் மேம்பட்ட புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/60&oldid=1576559" இலிருந்து மீள்விக்கப்பட்டது