உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் – 5

சொற்களை அவ்வாறே

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள தம் மாணாக்கர்களைக் குறித்துச் சிலவற்றைச் சொல்ல அச் நெடுந்தொலைவிலிருந்த அவர்கள் கேட்டு ஒழுகுதலும், ஒரு பெரிய இடரிலே அகப்பட்டுத் தத்தளிக்கும் ஒருவர் கூவியழுத சொற்களை நெடுந் தொலைவிலிருந்த முனிவர்கள் கேட்டு விரைந்து வந்து அவரை அவ்விடரினின்று மீட்டலும் நிகழா நிற்கின்றன. இங்ஙனஞ் செவியுணர்வு நுட்பப்படுத்தப்பட்ட வுடனே புறத்தே செயற்பாலனவாம் நுண்ணிய பழக்கங்கள் முற்றுப்பெற்றன வென்று அறிதல் வேண்டும்.

இதுகாறுங் கூறிய பொறியுணர்வுகளைப் பழக்கும் முறைகள் இவற்றிற் பழகி அறியாதார்க்குப் பழக அரியன போற் காணப்படுமாயினும், மிகவும் பருப்பொறியாகிய மெய்யினை நுண்ணிய ஊற்றுணர்விற் பழக்கத் துவங்குவார்க்கு அதனைத் துவங்கும்போதே அஃது எளிதாயும் மகிழ்ச்சி தருவதாயுங் காணப்படும். இன்னும், ஒரு பொறியுணர்வினை நுண்ணிதாக்கவே ஏனைப் பொறியுணர்வுகளுந் தாமாகவே நுண்ணிய நிலையினை அடையத் துவங்குமாகலின், ஒரு பொறியுணர்வினை நுண்ணிய நிலையிற் பழக்கியபின் ஏனைப் பொறியுணர்வுகளையும் அந்நிலையிற் கொண்டுபோய்விடுவது மிக எளிதிலே கைகூடற் பாலதொன்றாய் முடியுமென்று உணர்க. அஃது எதனாலென்றால், ஐம்பொறிகளும் வேறு வேறியற்கை யுடையனவாயிருப்பினும், அவ்வைம்பொறிகளினுஞ் சேர்ந்து நின்று அறியும் மனவுணர்வு ஒருகாற் பதப்படத் துவங்கியபின், ஏனைப் பொறிகளின் வழியேயும் அது பின்னும் பின்னும் பதமெய்துதல் எளிதிலே கைகூடி வருதனா லென்றுணர்க. இனி, ஐம்பொறி யுணர்வுகளொடு கூடிய மனவுணர்வினை ஒருகாலத்து ஓரிடத்து வைத்தே நுட்பப்படுத்தி அவ்வாற்றால் எல்லாவுணர்வுகளையும் ஒருங்கே நுட்பமாக்கும் அரசியற் றவமுறை, மெய்க் குரவனை எதிர்ப்பட்டு அவனறிவுக்கும் அறிவுமொழி பெறும் நல்வினை வாய்ந்த மிக முறுகிய மனநிலை யுடைய மாணாக்கருக்கன்றி ஏனையோர்க்கு வாயாதாகலின், யாம் ஈண்டு எடுத்துக் கூறிய முறைகளே

எத்திறத்தவரும் படிப்படியே பழகித் தம்முணர் வு களை நுட்பப்படுத்திப் பயன் பெறுதற்கு ஏற்பனவாமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/61&oldid=1576567" இலிருந்து மீள்விக்கப்பட்டது