உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

36

மறைமலையம் – 5

6

நினைந்த அளவானே, அப் பொருட்டன்மைகளான அமைதியுங் குளிர்ச்சியும் அறிதுயிலில் அமர்ந்திருந்த அம் மாதரார்பாற் றோன்றிய உண்மை நிகழ்ச்சி பெரிதும் உற்றறியற் பாலதாம். எனவே, பொருளை நினைக்கும் நினைவு அப்பொருட் டன்மைகளையுந் தானே தோற்றுவிக்குமென்று யாம் முன்னே கூறியவுரை மறுக்கலாகாத மெய்யுரையே யாமென்பது புலப்படுகின்ற தன்றோ? உயர்ந்த பொருட்டன்மைகளைத் தம்மிடத்து வருவித்து அவற்றைத் தம் வழிப்படுத்திக் கொள்ள அவாவும் நன்மக்கள் எல்லாரும், அப் பொருள்களை ஓவாது நினைவுகூர்ந்து வருதல் இன்றியமையாத பழக்கமாகும். இதனை விடுத்து நினைக்க வராத பண்புகளை மட்டுமே நினைக்கக் கடவேமென்று மயக்கவுரை கூறி அம் மயக்கவுரையாற் பிறரை ஏமாற்றி ஒழுகுவார் சொற்களை நம்பிப் பொருள் நினைவை விட்டு இம்மை மறுமைப் பயன்களை இழக்கும் பொய்ந் நெறியிற் சல்லா வண்ணந் தம்மைப் பாதுகாக்க வேண்டுவது ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம்.

துகாறும், விழித்திருக்கும்போது மனவுணர்வை நுட்ப மாக்குதற்கு இசைந்த பழக்கங்களையே விளக்கிக் காட்டினாம் இனித், துயிலும் போதும் அதனை நுட்பமாக்குதற்குரிய வழிவகைகளைப்பற்றிப் பேசப் போகின்றாம். பெரும்பாலும் பாதி நாள் நமக்குத் தூக்கத்திலே கழிந்து போகின்றது. தூக்கத்திற் சென்றவுடனே உயிர்களெல்லாம் அறிவிழந்து உயிரற்ற கற்போற் கிடக்கின்றன. தூக்கத்திலே, இன்னதென்று சொல்லுதற்குக் கூடாத ஒரு பேரிருள் நமதறிவை வந்து சூழ்ந்து கொள்ளுதலை மட்டும் வழக்கத்தில் அறிந்திருக்கின்றோம். இத்தகைய தூக்கமானது ஒவ்வொரு நாளின் இராப்பொழுதிலும் நமதறிவை வந்து விழுங்க, அதனால், விழுங்கப்பட்டு அதன் வயிற்றகத்தே செயலின்றிக் கிடக்கும் நாம். அங்கே உடனிருந்து உதவுங் கடவுளின் திருவருளால் திரும்பத் திரும்ப எழுப்பப் பட்டு விழித்துக்கொள்கின்றோம். இங்ஙனம் நாடோறும் இப் பேரிருளிற் போய்த் தங்கியிருந்து வருதலினாலேதான், பகற் காலத்தில் நாம் மிக முயன்று தேடிய நம் அறிவிற்பெரும்பாகத்தை நாள் ஏற நாள் ஏற இழந்து வருகின்றோம். பகலிற்றேடிய அரிய அறிவுப் பொருட்டிரளை இரவிற் றூக்கமாகிய எல்லையற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/69&oldid=1576634" இலிருந்து மீள்விக்கப்பட்டது