உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

(ஒரு மாணாக்கன் வருகின்றான்.)

மாணாக்கன்

கின்றோம்.

செல்.

73

அடிகேள்! நாங்கள் இதோ இருக்

காசியபர் : சார்ங்கரவா! நின் தங்கைக்கு வழிகாட்டிச்

சார்ங்கரவன் : அம்மா! இவ் வழியே இவ் வழியே வா.

(எல்லாருஞ் சுற்றி நடக்கின்றார்கள்.)

காசியபர் : கானக அணங்குகட்கு உறைவிடமான துறவாசிரம மரங்காள்! முதலில் நுங்கட்குத் தண்ணீர் விடாவிட்டால் தானும் நீர் அருந்த விரும்பாதிருந்தவளும், அணிந்து கொள்வதில் அவா இருந்தபோதிலும் நுங்களிடத் துள்ள அன்பினால் நுங்கள் இளந் தளிரைக் கிள்ளாதிருந் தவளும், நீங்கள் முதன்முதற் பூக்கின்றபோது விழாக் காண்டாடினவளுமான சகுந்தலை இதோ தன் கணவன் மனைக்குச் செல்கின்றாள்! நீங்களெல்லீரும் அவளுக்குப் போய்வருகவென விடைகொடுமின்கள்! (ஒரு குயில் கூவும் இசைகேட்டு) குயிலின் இன்னிசை கூவக் கேட்டமையால் சகுந்தலையின் காட்டு வாழ்க்கைக்குத் துணையாயிருந்த மரங்கள் விடைகொடுத்து விட் L ன.

L

(வானத்தில்)

வழியிலிடையிடையே கொழுந்தாமரை பொதுளி வளஞ்சால் தடங்கள் வயங்கிடுக,

அழிவெங் கதிர்வருத்தம் அடர்ந்த நிழன்மரங்கள் அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக,

கழிய மலர்த்துகள்போற் கழுமு புழுதியடி

கலங்கா தினிதாய்க் கலந்திடுக,

செழிய மலயவளி திகழ வுலவிடுக

திருவே யனையாள் செலுநெறியே.

(எல்லாரும் வியப்போடு கேட்கின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/104&oldid=1577163" இலிருந்து மீள்விக்கப்பட்டது