உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் 6

கௌதமி : துறவாசிரமத்திலிருக்கும் அணங்குகள் உறவினரைப்போல் அன்புடையனவாய் நீ போவதற்கு விடைதருகின்றன. நீ அத் தெய்வங்களை வணங்கிடுக.

சகுந்தலை : (அங்ஙனமே வணங்கி நடந்து மறைவாய்) அன்புள்ள பிரியம்வதே! என் கணவனைக் காணுதற்கு மிகுந்த ஆவலிருந்தாலும், இத் துறவாசிரமத்தை விட்டுப் பிரிகையில் என் அடிகள் மிக்க கள் மிக்க இடர்ப்பாட்டோடும் முன் செல்லுகின்றன. பிரியம்வதை : இந்தத் துறவாசிரமத்தைவிட்டுப் பிரிதற்கு நீ மட்டுமே துன்புறவில்லை; உன்னைப் பிரியவேண்டுங் காலம் அடுத்ததுபற்றி இத் துறவாசிரமும் அடையும் நிலைமையைப் பார்! மான்கள் தம் வாய் நிறையக் கௌவிய தருப்பைப்புல்லை வாயிலிருந்து நழுவ விடுகின்றன; மயில்கள் ஆடுதல் ஒழிகின்றன; பழுத்த இலைகளை லைகளை உதிர்க்கின்ற கொடிகள் கண்ணீர் சிந்தி அழுதலைப் போலிருக்கின்றன.

சகுந்தலை : (நினைவுற்று) அப்பா! நான் என் உடன் பிறப்பைப்போற் கருதிய வனசோதினி என்னும் மல்லிகைக் கொடியினிடத்து முதலில் விடைபெற்று வருகின்றேன்.

காசியபர் : நீ அதனிடத்து உடன்பிறப்பன்பு பாராட்டி வருதலை நான் அறிவேன். இதோ அது தென் புறத்தே யிருக்கின்றது.

சகுந்தலை : (அக் கொடியின் கிட்டப்போய்) வன சோதிm! நீ தேமாமரத்தைத் தழுவிக்கொண்டிருப்பினும், இப் பக்கமாய்ப் பரவியிருக்கும் நின் கிளைகளாகிய கைகளால் என்னைத் தழுவிக்கொள்; இன்று முதல் நான் உன்னைவிட்டுப் பிரிந்து நெடுந்தொலைவிற்போய் இருக்க வேண்டியவ ளாகின்றேன்.

காசியபர் : நீ நின் நல்வினை வயத்தால், நினைக்கென்றே நான் முன்னமே குறித்துவைத்த நினக் கிசைந்த கணவனொடு நீ கூட்டப்பட் டிருக்கின்றாய்; இப் புது மல்லிகைக் கொடியுந் தானாகவே இத் தேமாவினைச் சேர்ந்தது; ஆகவே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/105&oldid=1577164" இலிருந்து மீள்விக்கப்பட்டது