98
ஆறாம் வகுப்பு
களம் : ஒரு தெரு.
(அரசன் மைத்துனனான கொத்தவாலும், பின்னே கை இறுகக் கட்டப்பட்ட ஓர் ஆடவனை நடத்திக் கொண்டு இரண்டு காவலாளரும் வருகின்றனர்.)
காவலாளர் : (ஓர் ஆளை அடித்துக்கொண்டு) அடே கள்வா! அரசன் பெயர் செதுக்கப்பட்ட மணி பதித்திருக்கும் இந்தக் கணையாழி உனக்கு எங்கே அகப்பட்டது? சொல்.
ஆடவன்: (நடுக்கத்தொடு) நான் அப்படிப்பட்ட செய்கை செய்யிறவனல்லங்க. நீங்க அருள் பண்ணுங்க!
க
முதற் காவலன் :
என்ன! உன்னைத் தகுதியுள்ள பார்ப்பானென்று நினைச்சு அரசனே உனக்கு இதைப் பரிசாக் கொடுத்தாரோ!
ஆடவன் : இப்போ நான் சொல்றதைக் கேளுங்க. நான் சக்ராவதாரக் கரையிலிருக்கிற செம்படவன்.
இரண்டாங் காவலன்: ங் காவலன் : அடே திருடா! உன்சாதியை
யாங்கள் கேட்டோமா?
கொத்தவால் : ஏ சூசகா! அவன் சொல்லவேண்டுவ தெல்லாம் ஒழுங்காகச் சொல்லட்டும்; அவனை இடையிலே தடுக்க வேண்டாம்.
காவலாளர் இருவரும் : தாங்கள் இடுங் கட்டளைப் படியே, மேலே சொல், மேலே சொல்.