உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் -6 *

இருவரும் : அப்படியே. தாங்கள் அரசனுடைய அருளைப் பெறப்போங்க.

(கொத்தவால் போகிறான்.)

முதற் காவலன் : அடே சானுகா! எசமான் போய் ரொம்ப நாளியாயிட்டே.

இரண்டாங் காவலன் : ஆமா, சமயம் பார்த்தல்லோ ராசாகிட்டப் போகணும்.

முதற் காவலன் : அடே சானுகா! இந்தப்பயலெ கொலை பண்ணுறதுக்கு எப்போ இவன்மேலே பூமாலை கட்டுவே னென்னு என்கை துடிக்குது. (செம்படவனைக் குறித்துக் காட்டுகிறான்.)

ஆ வன் : காரணமில்லாமே கொலைபண்

உங்களுக்கு ஞாயமல்லங்களே சாமி.

காலைபண்ணுறது

இரண்டாங் காவலன் : (பார்த்து) நம்ம எசமான், ராசா கிட்டே கட்டளெ பெத்துக்கிட்டுக் கையிலே ஒரு ஏடுவைச் சுக்கிட்டு இந்த வளியா வருராங்க. அடே! நீ களுகுக்கு ரையாப் போவே, அல்லாட்டி நாய்வாயைப் பாப்பே.

(கொத்தவால் வருகிறான்.) :

L

நீ

கொத்தவால் : ஏ சூசகா! இந்த வலைஞனை விட்டுவிடு; இந்தக் கணையாழி இவனாற் கைக்கொள்ளப்பட்ட வகை முற்றும் மெய்தான்.

சூசகன் : தாங்கள் சொல்லுறபடியே.

இரண்டாங் காவலன் : இவன் எமப்பட்டணம் போயித் திரும்பி வந்திருக்கிறான். (செம்படவனைக் கட்டவிழ்த்து விடுகின்றான்.)

வலைஞன் : (கொத்தவாலை வணங்கி) சாமீ! என் உயிரு உங்களதுதான்.

கொத்தவால் : இதோ அரசன், கணையாழிக்குள்ள விலையை உனக்குப் பரிசாகக் கொடுக்கும்படி கட்டளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/131&oldid=1577190" இலிருந்து மீள்விக்கப்பட்டது