சாகுந்தல நாடகம்
101
செய்திருக்கின்றார். (அவனுக்கு விலையுயர்ந்த பரிசில் கொடுக்கின்றான்.)
வலைஞன் : (பணிந்து ஏற்று) சாமீ! எனக்கு ரொம்ப உதவி பண்ணினிங்க.
சூசகன் : களுவிலே யிருந்து எறக்கி யானெ முதுகிலே வைச்சா உதவிதான்.
சானுகன் : எசமான்! இந்தப் பரிசெப் பாத்தா ராசவுக்கு இந்தக் கணையாளியிலே பிடிப்பு இருக்கிறாப் போலே தோணுதே.
கொத்தவால் : அதிற் பதிப்பட்டிருக்கும் விலையுயர்ந்த செழுமணியின் பொருட்டாக அஃதவரால் விரும்பப் பட்ட தென்று யான் நினைக்கவில்லை. அதனைக் கண்டவுடனே அரசன் தனக்கு மிக இனிய யாரோ ஒருவரை நினைத்துக் கொண்டார்; இயற்கையிலே அவர் அமைதியுடையரா யிருந்தாலுஞ், சிறிதுநேரம் அவர் கண்களில் நீர் ததும்பப் பெற்றார்.
சூசகன் : தாங்க ராசாவுக்கு நல்ல உதவி செய்திங்க.
சானுகன் : ஏன், இந்த மீங்கொல்லிப் பயலுக்கு ஒத்தாசை பண்ணினிங்க என்று சொல்லேன். (வலைஞனைப்
பொறாமையுற்றுப் பார்க்கின்றான்.)
வலைஞன் : சாமீ! இதிலே பாதி உங்க பூச்செலவுக்கு வைச்சுக்கிங்கோ.
சானுகன் : அவ்வளவு சரிதான்.
கொத்தவால் : ஏ வலையா! நீ இப்போது எனக்கு மிகச் சிறந்த நெருங்கிய நேசனாய் விட்டாய். முதலில் உண்டாகும் நேசமானது கள்ளுக்கு எதிரில் ஆகவேண்டுமென்பது நமது வழக்கம். ஆகையால், நாம் கள்ளுக்கடைக்கு நேரே போவாம்
வா.
(எல்லோரும் போய்விட்டார்கள்.)