102
மறைமலையம் 6 *
இடையுரை முற்றியது.
(சானுமதி என்னும் ஓர் அரம்பை மாதுவான ஊர்தியொன்றில் வருகின்றாள்.)
சானுமதி : முனிவர்கள் நீராடும் இந்நேரம் வரும் வரையில், என் முறைப்படி செய்ய வேண்டுவதை அப்ஸரஸ் தீர்த்தக் கரையிற் போயிருந்து செய்துவிட்டேன். இனி நானே நேரிற்போய் இவ் அரசமுனிவரின் நிலையைக் காண்கிறேன். மேனகையின் தொடர்பினாற் சகுந்தலை எனக்கு என் உயிர்போல் இருக்கின்றாள். தன் புதல்வியின் பொருட்டாகவே என்னை அவள் தானே வரவிடுத்திருக் கின்றாள். (சுற்றிப் பார்த்து) விழாக்கொண்டாடுதற்கு உரிய இந்தப் பருவத்திலே யுங்கூட, இவ் வேந்தன் அரண்மனையில் ஏதொரு விழாக் கொண்டாட்டமும் காணப்படாம லிருப்பது ஏனோ! எண்ணி ய அளவில் எல்லாவற்றையும் அறியக் கூடிய ஆற்றல் யான் உடையேன். ஆனாலும், என்னைப் பெருமைப்படுத்தி என் தோழி சொல்லியதற்கு நான் மதிப்புக் கொடுத்தல்வேண்டும். நல்லது, திரஸ்கரிணி என்னும் மறைப்பு வித்தையால் இந்தத் தோட்டக் காரிகளுக்குப் பக்கத்திலேயே இவர்கள் காணக் கூடாமல் மறைந்து நின்று கொண்டு எல்லவாற்றையும் தெரிந்து கொள்ளுகின்றேன். (வானவூர்தியை விட்டிறங்கி நிற்கின்றாள்.)
(மாமரத்தின் மலர்முகையைப் பார்த்துக்கொண்டு ஒரு பாங்கியும் அவட்குப் பின்னே மற்றொருத்தியும்
முதற் பாங்கி :
வருகின்றனர்.)
விழுத்தக்க வேனிலுயிர் மிகுதரவே கொண்டு
ப
முழுச்செம்மை பசுமையுடன் வெண்மையெனு மூன்றுங்
குழைத்திட்டா லெனவயங்கு கொழுமாவின் முகையே! தழைப்பருவ நற்குறியாத் தயங்குநையென் றறிந்தேன்.
இரண்டாம் பாங்கி : ஏடி பரபிருதிகே! என்ன இங்கே தனியே பேசிக் கொண்டிருக்கின்றாயே?