சாகுந்தல நாடகம்
165
கூட்டையும் வில்லையும் பாதுகாத்து வைத்துக்கொடுக்குந் தொழிலில் இவ் வயல்நாட்டு மாதர்களை அமைப்பது பழைய வழக்க மென்பது இதனாற் புலனாகின்றது. இவ் யவனர் தமது நாட்டிலிருந்து ‘தேறல்' எனப் பெயரிய இனிய பருகுநீரைக் கொணர்ந்து தமிழ் நாட்டில் அஞ்ஞான்று விலைசெய்தமை "யவனர்நன்கலந்தந்த தண்கமழ் தேறல்" (புறநானூறு, 56) என்னும் நக்கீரனார் செய்யுளாலும் அறியக் கிடக்கின்றது.
-
சூழ்ச்சி - உபாயம். புன்முறுவல் சிறுசிரிப்பு விழைந்த - விரும்பிய . காமுற்று - மோகித்து. கடிதடம் சகனபக்கம் தொடையின் உட்பக்கம். பொறை - சுமை: பாரம்.
-
(பக். 28) கடிந்துபேசல் - கண்டித்துப்பேசல். முறுவலித்து - சிரித்து, இது ‘முறுவல்' என்னும் பெயரடியாகப் பிறந்தவினை. திமிர் - விறைப்பு. காணல் - நீர்நிலைகளின் ஓரத்தில் விளையும் ஒருவகைப் புல். விலங்கு - மிருகம்; மக்க ளுடம்பு போல் நெடுக நில்லாது மிருகங்களின் உடம்பு குறுக்காய் இருத்தலால் இங்ஙனம் பெயர் பெற்றது: விலங்கு குறுக்கு.
-
(பக்.
29)
உறுப்புகள்
-
ஒன்றோடொன்று உரைசி.
(பாட்டு) புள்ளி விளங்கு
அங்கங்கள்.
உராய்ந்து
...மாட்டேனால்
ய
-
இதன் பொருள்: புள்ளிவிளங்கு வெண்புள்ளி களுடை தாய்த் திகழும், பொன்மான் - பொன்னிறமான மான் ஆனது, உடன்பயின்ற - தன்னுடன் பழகிய, வள்ளைச் செவியாள் வள்ளைத் தண்டை யொத்த காதினை யுடைய ளாகிய, என்மாதர்க் கொடி தனக்கு - எனக்குக் காதலை விளைக்கும் பூங்கொடி போல்வாளான சகுந்தலைக்கு, தெள்ளுமட நோக்கம் தெளிவுடையதாய்க் கள்ள மறியாத பார்வையி தெருட்டியதால் - கற்பித்தமையால், மற்ற அதனை - அத்தகைய மானை, உள்ளி - எய்வதற்கு எண்ணி, கணைதொடுத்தும் - அம்பை வில்நாணில் தொடுத்தும், உய்த்திட நான் மாட்டேன் அதனைச் செலுத்துதற்கு நான் முடியாதவனா யிருக்கின்றேன்; ஆல்' அசை. “மாதர் காதல்” (தொல்காப்பியம் உரியியில், 22).
-
னை,