உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

167

கோபித்து. ஆடவன் - ஆண்மகன். முதிய - ஆண்டில் முதிர்ந்த: கிழட்டுத்தனமுள்ள. கரடிகள் மக்களின் மூக்கிறைச்சியைத் தின்பதில் மிக்க விருப்பம் உடையன வென்பது தசகுமார சரிதத்திலுங் கூறப்பட்டது.

-

கூட்டம். அசை

(பக். 32) மருப்பு - கொம்பு. குழாம் போடுதல் - முதலில் அரைகுறையாய் உட்கொண்டு வயிற்றின் ஒரு பையில் அடக்கிவைத்த உணவை மீண்டும் வாயினுள் இழுத்து நன்றாக மென்று அரைத்துத் தீனிப்பைக்குட் செலுத்துதல்; இது பெரும்பாலும் இரட்டைக் குளம்புகள் வாய்ந்த ஆடு மாடு மான் முதலான சைவ விலங்குகளின்பாற் காணப்படும். பரிய பருத்த குட்டை சிறுநீர்நிலை. கெண்டி - கிளறி.

-

போர்க்களமர்

-

-

சண்டையிடும் வீரர். அச்சுறுத்தல் -

-

அஞ்சும் படி செய்தல். மாட்டு இடத்து. காத்திருத்தல் - ஒளிந் திருத்தல். சூரியகாந்தக்கல் - பகலவன் வெப்பம் பட்டவுடன் தீயைத் தருவது. காலுதல் - நக்குதல்; வெளிப்படுத்தல்.

-

-

புளுகு கட்டிச்சொல்லும் பெய். வாய்க்கவில்லை பலிக்கவில்லை.

உடைகள் - சீலைகள். களைந்து - நீக்கி.

(பக். 33) இடைமிடைந்த - நடுவே நெருங்கிய படங்கு மேற்கட்டி. இருக்கை - தவிசு: ஆசனம் கட்கு இனிய - கண்ணுக்கு இனிய, நன்பொருள் - நல்ல பொருள். ஏற்கனவே - முன்னமே அணிகலம் - பூணாரம்: நகை: ஆபரணம்.

மேல்ஏறிட்டு - மேல் நிமிர்ந்து. முழுமதி - கலை நிரம்பிய நிலா, பூரணச்சந்திரன். புத்தொளி புதிய ஒளி.

-

-

-

-

(பக். 34) நாடாது விரும்பாது. வானநாடு - துறக்க உலகம். உறையும் வசிக்கும் அரம்பைமாது தெய்வப்பெண் எருக்கம் புதல் - எருக்கஞ்செடித் தொகுதி.

உறுமணங் கமழும் புதிய மல்லிகைப்பூ மணம் இல்லாத எருக்கஞ்செடிமேல் விழுதலைப், பேரழகாற் றுலங்குஞ் சகுந்தலை அழகு மழுங்குதற்கேதுவான தவவாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/198&oldid=1577681" இலிருந்து மீள்விக்கப்பட்டது