சாகுந்தல நாடகம்
221
படர்வதற்கு - தன்னொடு கூடிவந்த சுற்றத்தினரோடும் மீண்டு செல்வதற்கு, என் காதலிதான் பரிவுறுங்கால்-என் அன்புமிக்க மனையாளான சகுந்தலை துன்புற்றக்கால், பெருந்தந்தைக்கு அடியார் ஆம் சீடர் - தவப்பெருமை வாய்ந்த தன் தந்தை யாராகிய, காசியபருக்கு அடியவராம் மாணவர், அவர்போல் பெரியவர் - காசியபரைப் போலவே தவப்பெருமை வாய்ந்தவர், ஆர்த்து - உரத்துக்கூவி, இந்த இடமே நில் என - இந்த டத்திலேயே தங்கக்கடவாய் என்றுகூற, ஒழுகும்நீர் விழியான் எங்கினன் - ஒழுகாநின்ற நீரினையுடைய கண்ணினன் ஏக்க முற்றுத் திகைத்தனன். ஏ : அசை.
ய
'நீக்கு உண்டு' நீக்குதலை அடைந்து என முதனிலைப் பொருள் தந்து, பின்னர் ஒருசொல் நீர்மையாய் நீக்கப்பட்டு எனப் பொருள் பயந்தன; ‘நீக்கு’: முதனிலைத் தொழிற் பெயர், உண்: துணைவினை. 'பரிவுறுங்கால்' என்பது பரிவுற்றக்கால் என இறந்த காலப் பொருளில் மயங்கியது; இவ்வாறு வருதல், வாராக் காலத்து வினைச்சொற் கிளவி
இறப்பினும் நிகழ்வினுஞ் சிறப்பத் தோன்றும் இயற்கையுந் தெளிவுங் கிளக்குங் காலை
என்னுஞ் சூத்திரத்தான் (தொல்காப்பியம், வினை. 48) அமையும். பற்று - அன்பு. இயங்கும் - உலவும்.
(பக், 112) கொழுநன்
—
காதற்கணவன். கற்புடை மகளிர்
தங்கணவரைத் தெய்வமாகக் கருதி நடத்தல்,
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.
என்னுந் திருக்குறளிலுங் காண்க.
வியக்கத்தகுவது
-
(குறள் 55)
அதிசயிக்கத் தகுவது. ‘அதிசயம்
வடசொல். நாள் அடைவு நாள் ஓட்டம்: அடைவு - முறையே
செல்லுதல்.
-
(பாட்டு) காரிகைதன்னை
-
.... செய்கையோ.