222
மறைமலையம் -6
தன் பொருள் : காரிகை தன்னை யான் கலந்திருந்தமை அழகியாளான சகுந்தலையை யான் கூடியிருந்த நிகழ்ச்சியை, ஓரில் - ஆராய்ந்து பார்ப்பின், அது, பொய்த் தோற்றமோ கானல் நீர்போற் பொய்யான தோற்றமோ, உளத்தின் மாற்றமோ என்மனத்தின் செயலால் உண்மைக்கு மாறாகக் காணப்படுங் கனவு தானோ, சேரிய பிறவியில் திரண்ட நல்வினை முன்னே சேர்ந்து சென்ற பழம் பிறவிகளில் குதொக்க நல்வினை, சீரிய பயன் பயந்து ஒழிந்த இப்பிறவியில் வந்து எனக்குச் சிறந்த தொரு பயனைத் தந்து உடனே L மறைந்த செயலாகுமோ, இன்னதென்றறிகிலேன் என அரசன் கவன்றான் என்பது.
-
செய்கையோ
-
சான்ற - (வடசொல்) சாட்சி. "எளிதிலே கிடைத்தற்கு இல்லாத இடம்” என்று அரசன் குறிப்பிட்டது சகுந்தலையின் விலை; இக் கணையாழி அவளது விரலை அணுகப்பெற்றது எளிய தாகாது என்றான்.
-
(பக். 113) கடைகெட்ட தாழ்ந்ததினுந் தாழ்ந்த.
(பாட்டு) கெண்டையங்....
—
நீ
ஒத்தியால்.
நீ
இதன் பொருள் : கெண்டை அம் கண்ணினாள் கெண்டை மீனைப் போல் வடிவுஞ் செயலும் வாய்ந்த அழகிய கண்களையுடைய சகுந்தலையின், கிளிநக விரலிடம் கொண்டு கிளிமூக்குப்போற் சிவந்து விளங்காநின்ற நகத்தையுடை இரண்டாம் விரலை இருக்கும் இடமாகப் பற்றிக்கொண்டு, நீ சிறிதுநாள் கூடி நீ சில நாட்கள் அதனொடு சேர்ந்திருந்து,பின் அதை விண்டமை தெரிந்திடில் - பிறகு அதனைவிட்டு நீங்கின தன்மையை ஆராய்ந்து பார்ப்பின், வினைவளம் சிறிதுஉற - பண்டை ஊழின் நலமானது சிறிது வரப்பெற்றமையால், அத்துணைச் சிறந்தாளை யான் காதன் மனைவியாகச் சிலநாட்பெற்று, பெண்டிரைப் பிரிந்த பிறகு அப் பெண்ணைப் பிரிந்து விட்ட, என்பெற்றி ஒத்தி – எனது தன்மையை ஒத்திருக் கின்றாய், என்று அரசன் கணையாழியை நோக்கிக் கவன்று கூறினானென்க. ஆல் : அசை.