உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

227

பழி அறு பாவையைப் பார்க்க கில்லேனே - குற்றம் அற்ற பாவைபோல்வாளைப் பார்க்க மாட்டாதேனாயினனே! என்க.

L

உறக்கத்தின்கண் உடன்நிகழுங் கனவிற் சகுந்தலையைக் காணலாமென்றால் உறக்கமோ வருவதில்லை; விழித் திருக்கையில் ஓவியத்திற் காணலாமென்றால் ஆற்றாமையால் என் கண்களில் நிரம்பியோடுங் கண்ணீரினாற் பார்வை மறைபட்டு அதுவுஞ் செய்தற்கு இயல்வதில்லை என அரசன் கவன்றுரைத்தான். விழிப்பு நிலையிற் பல்லாண்டுகளாக நிகழும் நிகழ்ச்சிகளெல்லாங், கனவு நிலையிற் சில நொடிப்பொழுதுகளில் நிகழக் காண்டலின் “விரைகனா” என

அஃது அடைகொடுக்கப்பட்டது.

(பக். 120) ‘தரளிகை' என்பாள் அரசன் மனைவியான வசுமி’க்குத் தோழியாவள். 'மேகபிரதிசந்தம்' என்பது மேகத்தின் நிறத்தினையும் வடிவினையும் ஒத்துத் தோன்று மாறு அமைக்கப்பட்ட ஓர் அரண்மனைக் கட்டிடத்தை

உணர்த்துகின்றது.

(பக். 121) 'வேண்டா விருப்பு' என்பது, உள்ளத்தில் வேண்டாதிருந்தே வெளிப்பார்வைக்கு விருப்பமுடையார் போல் ஒழுகுவாரிடத்து உளதாவது.

கண்ணுறுவீர் - பார்ப்பீர். 'வாணிகம்' என்பது பணி என்னும் முதனிலையிற் றோன்றிய தமிழ்ச்சொல், பணி தாழில்; பணிகம் என்பது வணிகம் எனவும், அது நீண்டு வாணிகம் எனவும் வரும்; 'வியாபாரம்' என்பது வடசொல்.

-

(பக். 122) பரிவுறல் - இரங்குதல். செல்வமுடையார்க்கு மனைவிமார் பலர் இருக்கும் பண்டை வழக்கம் இறையனாரகப் பொருள் உரையுள்ளுங் காண்க. உசாவுதல் - கேட்டு ஆராய்தல்.

'சீமந்தம்' என்பது கருக்கொண்ட மகளிர்க்கு ஆறாந் திங்களிற் கூந்தலை வகிர்ந்து செய்யும் ஒரு சடங்கு; இதனை முதுகு நீரிடுகை' எனவுங் கூறுப.

-

(பக். 123) வெய்துயிர்த்தல் நெடுமூச்சுவிடல். சார்பு அணைவு, ஒரு குடும்பத்தைத் தாங்குவார் மேற்றாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/258&oldid=1577741" இலிருந்து மீள்விக்கப்பட்டது