உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் 6

ஏதிலான் அயலான், உறவினன் அல்லாதவன். சீர் - செல்வம், வாழ்வு. வசை - பழிச்சொல்.

நிலைபேறு - நிலையானது, உறுதி. அறக்கிழத்தி - நூலிற் சொன்ன அறநெறிப்படி ஒருவற்குரியளான மனைவி. கால்வழி - (வடசொல்) சந்ததி. இடையறாது - நடுவேவிட்டுப் போகாது. (பாட்டு) பிள்ளையில்லாறந்தோ!

-

(பக். 124) இதன் பொருள் : பிள்ளையில்லாக் கொடியே னால் பெயப்பட்ட எள்நீரை பிள்ளையில்லாக் கொடிய வனாகிய என்னால் வார்க்கப்பட்ட எள்ளொடு கலந்த நீரை, பிதிரர் கண்டு மறுமையுலகிற் சென்ற என் மூதாதையர் பார்த்து, தள்ளாத முறைப்படியே இவன் பின்னே தகுநீரும் எள்ளுங் கூட்டிக் கொள்ளுமினோ பலி, எனவே கொடுப்பார் ஆர் - தவறாத நூன் முறைப்படியே இவனுக்குப் பிறகு தகுதி வாய்ந்த நீரும் எள்ளுஞ் சேர்த்து இதனை யுணவாக ஏற்றுக் கொள்வீராக வென்று கொடுப் பவர் யாருளர்? எனக்கூறி உகும் கண்ணீரோடு அள்ளியே உண்பார் - என்று சொல்லிக் கொண்டே சொரியுங் கண்ணீரோடு அப் பலியினை வாரியுண் பார்கள், பலிபெறுவோர் ஐயம் உறல் ஆயிற்று அந்தோ - யாம் இடும் உணவினைப் பெறும் மூதாதையர் என்கால் வழி யற்றுப்போமோவென்று ஐயப்படுதற்கு! இடமாயிற்றே ஐயகோ ! என்றவாறு. ஆல் : அசை.

தள்ளாத என்பது தவறாத எனப் பொருடருதல் "கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை" என்னுந் திருக்குறளுக்குப் பரிமேலழகியார் உரைத்த உரையைக் விண்ணோருணவு.

காண்க.

பலி

-

விளக்கினொளி திரைமறைப்பினால் அறியப்படாதது போலத் தமக்கு மகன் ஒருவனிருந்தும் அவனை அறியாமை யால் அரசன் வருந்தா நின்றானெனச் சானுமதி நினைத்தான். ஒரு ரு குடியை விளங்கச் செய்தல் பற்றிப் புதல்வன் விளக்காக உருவகஞ் செய்யப்பட்டான் என்க. அவன் இருப்பை அறியாமை திரையாக உருவகஞ் செய்யப்பட்டது. ஓலம் முறையிட்டு அழைக்கும் ஒலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/259&oldid=1577742" இலிருந்து மீள்விக்கப்பட்டது