உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

229

(பக் 125) இடர் -(வடசொல்) ஆபத்து. தளம் - (வடசொல்) உப்பரிகை. இயங்குதல் - நடமாடுதல். தான் சகுந்தலையை விலக்கி விட்ட குற்றத்தினாலோ அல்லது மாதவியன் செய்த குற்றத்தினாலோ தீய பேய்கள் தன் அரண்மனையினுள் இயங்கலாயின வென்று அரசன் கருதினான்.

கருப்பங் கழி - நீள வளர்ந்த கரும்பாகிய கோல். தின்னுதற்குரிய கருப்பங்கோலைத் தான் துன்புறுங் காலத்துங் குறிப்பிடுதலால் மாதவியன் உணவில் மிகுவிருப்பினன் என்பது புலப்படுகின்றது. ‘கையுறை' என்பது தான் தொடுக்கும் அம்பின் கூரிய ஓரங்கள் உரைசிக் கைவிரல்கள் புண்படாதபடி அவற்றிற்கு உறையாக இடப்படுவது (glove).

(பக். 126) பருக விலங்கு மிருகம்.

குடிக்க. விடாய் - (வடசொல்) தாகம்.

(பக் 127) சான்றோர் -அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி என்னும் உயர்குணங்களான் மிக்கவர்கள்.

-

(பக்.128) தண் கதிரவன் - குளிர்ந்த கதிர்களையுடைய மதி. படைக்கலன் - (வடசொல்) ஆயுதம். மகவான் - இந்திரன்; மகம் (தமிழ்) வேள்வி; நூறுகுதிரை வேள்விகளைச் செய்து முடித்தோற்கு இந்திரபதலி வருமென்பது புராணக்கூற்று. எது இயைபு, காரணம்; இத் தமிழ்ச்சொல் வடமொழியிற் சென்று ‘ஹேது' எனத் திரிந்தது. சினம் - கோபம். ஆற்றல் - வல்லமை.

ஏழாம் வகுப்பு

(பக். 129) இந்திரனால் வருவிக்கப்பட்டு விண்ணுலகு சென்ற துஷியந்த மன்னன் அவற்குக் கொடும் பகைவரான அரக்கரைப் போர்முகத்திற் றொலைத்து, அவனால் மிகுந்த சிறப்புச் செய்யப்பெற்று, முன் ஏறிச்சென்று வானவூர்தி யிலேயே அமர்ந்தவனாய், மாதலி அதனைச் செலுத்தத், தனது நகர்நோக்கி வானிலிருந்து படிப்படியாய்க் கீழிறங்கி வருகின்றான். வரும்போது கீழ்க்கீழுள்ள மண்டிலங்களின் காட்சிகளைக் கண்டு, அவற்றின் அழகுகளை மாதலிக்குச் சொன்ன வண்ணமாய் இறங்கிக், கடைப் படியாய் நிலவுலகத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/260&oldid=1577743" இலிருந்து மீள்விக்கப்பட்டது