உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு *

251

குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நிலத்தை ஆயும் நில இயலார் ஆய்வினைப்போல, நூலை நுணுகி ஆய்ந்த ஆய்வின் பயனாக, அனைவரும் ஒப்பும் வகையில், தமிழ் இலக்கிய வரலாற்றின் காலத்தை மேற்காட்டியபடி ஆறுவகையாய்ப் பிரித்துக் காட்டியுள்ளார்.

இலக்கிய வரலாற்றுக்குத் துணைசெய்யும் அவருடைய கல்வெட்டறிவு

66

""

மாணிக்கவாசகர் இயற்றிய திருச்சிற்றம்பலக் கோவையாரில் வரகுண பாண்டியனைப் பற்றிய குறிப்பு உண்டு. வரகுணனாந் தன்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் (திருக்கோவை: 306) “சிற்றம்பலம் புகழும், மயலோங் கிருங்களி யானை வரகுணன் (திருக்கோவை: 327) எனவும், மாணிக்கவாசகர் குறிப்பிடும் வரகுண பாண்டியனைப் பற்றிக் கல்வெட்டுக்களில் வரும் சான்றுகளைக் காட்டி, சிலர் மாணிக்கவாசகர் காலத்தை ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி எனவும் கூறுவர். அடிகளார் தம் கல்வெட்டுத் திறனைக் கொண்டே, மாணிக்க வாசகர் குறிப்பிட்ட வரகுண பாண்டியன் தமிழ்நாட்டிற் கல்வெட்டுக்கள் உண்டாவதற்கு முன், அஃதாவது கி.பி. 4 ஆம் நூற்றாண்டுக்கு முன் முன் இருந்தனன் என்பதைத் தெளிவு படுத்துகிறார்.

கல்வெட்டுக்களிற் கரிகாலன் பெயரால் மூவர் அறிய வந்தாலும், அப் பெயராலேயே சங்க காலத்தில் கரிகாலன் ஆண்டமையைச் சுட்டும் அடிகளார், அதுபோலவே வரகுணன் எனும் பெயரில் இருவர் கல்வெட்டில் குறிக்கப்பட்டாலும், மாணிக்கவாசகர் குறிப்பிட்ட வரகுணன், கல்வெட்டுத் தோன்றும் முன்பே வாழ்ந்தவன் என்று நிறுவுகிறார். பண்டைத் தமிழரசர்கள் காலத்தில் கல்வெட்டு இல்லாமல் இருந்தமைக்கும் இரண்டு காரணங்களைக் காட்டுகிறார். முதலாவது: அஞ்ஞான்றிருந்த சேர, சோழ, பாண்டியர் என்னும் தமிழ் வேந்தர் மூவரும் தமக்குள் இடையிடையே போராடி நிற்பினும், பிற நாட்டரசர்க்கு இடங்கொடாத

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/282&oldid=1577766" இலிருந்து மீள்விக்கப்பட்டது